பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரமதத்துவம்

பிரளயாகர்


பிரமதத்துவம்- இறையாண்மை.

பிரமத் தன்மை- ஒருவன் ஒருவனை வீைத இடத்தும் வாழ்த்திய இடத்தும் கைகாலை தறித்த இடத்தும் அறம் மறம் அடையாமல் இருக்கும் இறை நிலை.

பிரம புராணம்- பதும புராணம்.

பிரமம் - இறைவன்.

பிரம முத்திரை- சைவ சமய முத்திரைகளில் ஒன்று.

பிரம ரூபம்- பிரம வடிவம். பத்துச் செயலில் ஒன்று. நாம் வடிவத்திற்கும் சீவனுக்கும் அதிட்டானமாயுள்ளது. சச்சி தானந்தம் என்று உணர்தல்.

பிரம வாதம்- உலகம் எல்லாம் பிரமன் இட்ட முட்டை என்னுங் கொள்கை.

பிரமன்- முழு முதற்பொருள்.

பிரமாணம்- பொருள்; அளவை, சான்று. அதாவது அறிவதற்குக் கருவியாய் இருப்பது. எண்ணிக்கை குறைந்தது 3 நடு நிலை 6. அதிகம் 10 அல்லது அதற்குமேல்.

வகை

அளவை பத்து பின்வருமாறு,

1) காட்சி (பிரத்தியட்சம்)- உலகாயதன்.

2) கருதல் அளவை (அனுமானம்)- பெளத்தர் வைசேடிகர்.

3) உரை, ஆக்மம் (சப்தம்)-சாங்கியர்.

4) ஒப்பு (உவமானம்)- நையாயிகர்.

5) பொருள்(அருத்தாபத்தி)- பிரபாகர்

6) இன்மை(அனுலப்தி)-பாட்டர்.

7) உண்மை (சம்பவம்)- பெளராணிகர்.

8) ஒழிபு(பாரிசேடம்)- பெளராணிகர்.

9) மரபு வழிச் செய்தி ( ஐதிகம்)-பெளராணிகர்.

10)இயல்பு (சுவாபலிங்கம்)- பெளராணிகர்.

பிரமாணஇயல்- 1) சான்றுகளை ஆராயும் மெய்யறிவுத் துறை 2) நூற் பிரிவு.

பிரமாதா- அறியும் பொருள் (உயிர்), அளந்து கொள்பவன்.

பிரமான்மவாதி- பிரமம் என்பது சித்தாகிய ஆன்மாவே என்னுங் கொள்கையினர். பிரமம் ஆன்மா ஆகாது எனச் சிவஞான போதம் மறுக்கும்.

பிரமிதி- அறிதல், அளவையால் அறிந்த மெய்யுணர்வு.

பிரமேயம்- அறியப்படும்பொருள். அளவையால் அறிந்து கொள்ளப்படுவது.

பிரயோகம்- வழங்கும் முறை.

பிரவர சைவர்- ஏழு வகைச் சைவருள் சிவதீக்கைபெற்றவர்.

பிரவாக அனாதி- தொடர்ந்து வரும் நீரோட்டத்தில் முன் வந்த நீர் எது பின் வந்த நீர் இது எனப்பிரித்து அறியப்படாமை.

பிரவாக நித்தம்- பொதுவாகக் கன்மம் என்று பார்க்கும் பொழுது, அதி அந்தம் இல்லாத நித்தப் பொருள் ஆகும். இதுவே பிரவாக நித்தம் எனப்படும்.

பிரவிருந்தன்- விந்துவின் காரியங்களைத் தொடங்கினவன்.

பிரளயாகர்- முத்திற உயிர்களில் பிரளயத்தில் கலை நீங்கிய ஒருவர்; ஆணவத்தையும் கன்மத்தையும் கொண்ட இரு மலத்தார். இவர்களுக்கு இறைவன் தானே அவர்கள் முன் தோன்றி ஞானத்தை உணர்த்

193