பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புளகம்

பூசலார் நாயனார்

புளகம் - மயிர்ச் சிலிர்ப்பு, எ-டு : சீதப் புளகம் அரும்ப
புளகம்பம் - மகிழ்ச்சி.
புறம் - 1) மறம் 2) உள். ஒ. அகம் 3) புறத்திணை.
புற அந்தக்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு.
புறஇருள்- புறத்தே காணப்படும் பூத இருள்.
புறக்கருவி - வாயரதி, சோத்திராதி
புறச்சமயங்கள் - வேதத்தை மட்டும் ஏற்றுச் சிவாகமத்தை ஏற்காது மறுக்கின்ற சமயங்கள். அவையாவன : தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் (பாஞ்சலம்) என ஆறு வகை.
புறத்தடியார் - சைவமல்லா ஏனைய சமயத்தவர்.
புறத்திணை - புறஒழுக்கம் ஒ.அகத்திணை.
புறம்பு - புறத்தே எ-டு உள்ளும் புறம்பும் நினைப்பு அறின் (திஉ 26) 2) வெளி.
புறப்புறச் சமயங்கள் - வேதம், ஆகமம் ஆகிய இரண்டையும் மறுக்கும் சமயங்கள். அவையாவன: உலகாயதம், மாத்துமிகம், யோகாசாரம், சவுத்திராந்திகம், ஆருகதம், வைபாடிகம் என ஆறுவகை. இவற்றில் முதலும் கடையும் தவிர, ஏனையவை பெளத்தம் சார்ந்தவை
புறப்பூசை - கோயில் முதலிய இடங்களில் சிவபெருமானுக்குப் புரியும் அருச்சனை.
புறநடை - ஒழிபு. கூறப்பட வேண்டிய பொருள்கள் பலவற்றில் முன்னமே கூறியவை போக, எஞ்சி நிற்கின்ற

ஒன்றைக் கூறுவது. சிவஞான போதத்தில் நூற்பா நூற்பா 6.க்குப் புறநடை7. இதனை வடமொழியில் வாக்கிய சேடம் என்பர்.

புறன் - உலகாயதர் முதலிய புறச்சமயத்தார் கூறும் புன்மொழி. எ-டு புணராமை கேளாம் புறன் (சிபோ அவையடக்கம்)
புற்கலம்- கல், இரும்பு, மரம் முதலியவை.
புற்பலாலம் - புல்லும் வைக்கோலும்.
புற்று - கரையான் புற்று (பாம்புப் புற்று).
புனர் உற்பவம் - மீளப் பிறத்தல்.
புனர்பூசை - சிறப்புப் பூசைக்கு மறுநாள் செய்யப்படுவது.
புனருத்தி - கூறியது கூறல் என்னும் குற்றம்.
புனல் - ஆறு, நீர்.
புன்சமயம்- அக,புறச்சமயங்கள்.
புன்னகம் - பாம்பு.
புனித மாயை - சுத்த மாயை.
புனிற்று - புதிய, புத்திளம்.
புனிதன் - சிவன்.
புனைந்துகோடல்- சூடுதல்.
புனைதல் -1) தலைமேல் சூடி வணங்குதல் 2) அடங்கி நிற்றல்.
புனைமொழி- புனைந்து கூறும் சொல்.

பூ -

பூ - தாமரைப் பூ, மலர் தூவி வழிபடுதல் மலரனைய உந்தி.
பூசலார் நாயனார் - மறையவர். திருநின்றவூர்-தொண்டைநாடு மனக்கோயில் கட்டி வெற்றி பெற்றவர். பல்லவ மன்னன்

199