பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிட்டித்தல்

அந்தக் கரணம், உள்


டானம். இவ்விரண்டிற்கும் பாலில் நெய் வேறாக மறைந் திருப்பதே உவமை.

அதிட்டித்தல் - கர்த்தா ஒன்றின் இடமாக நிற்றல்.

அதிட்டிக்கப்படுதல் - நிலைக்களமாகக் கொண்டு செலுத்தப் படுதல்.

அதி தீவிரம் - மிக்க தீவிரம்.

அதி தெய்வங்கள் - மேலான தெய்வங்கள். சதாசிவன் (நாதம்), மகேசுரன் (விந்து), உருத்திரன் (மகரம்), திருமால் (உகரம்), அயன் (அகரம்).

அதிதேவர்கள் - அக்கரங்கட்கு உரியவர். அவைகள் அவற்றைச் செலுத்த, அக்கரங்கள் அகக் கருவிகளைச் செலுத்தும்.

அதீதம்- கடாந்தது, மேற்பட்டது. புருடன் மட்டுமே நிற்க. ஏனைய எல்லாக் கருவிகளும் ஒடுங்கும் நிலை. வேறு பெயர் துரியாதீதம், உயிர்ப்படங்கள்.

அதிபத்த நாயனார் - பரதவர். நாகை சோழநாடு. தான் பிடிக்கும் மீன்களில் தலை மீனைச் சிவனுக்கு விட்டவர். இலிங்க வழிபாடு (63).

அதிபரிபக்குவம் - மிகுந்த பரிபக்குவம்.

அதிமார்க்கம் - தொன்மை நெறி. ஆகமமும் வேதமும் சைவாகமப் பிரிவினுள் ஒன்று.

அதிமார்க்க வினை - யோகஞ் செய்தல். சாந்தி கலையில் அடங்கும், சுத்தமும் அசுத்தமும் கலந்த போகங்களைத் தரும்.

அதிமார்க்கிக சாத்திரம் - பாசு பதம், காபாலிகம், மாவிரதம் என்னும் நெறிகளைக் கூறும் நூல்கள்.

அதிராவடிகள்- 11 ஆம் திருமுறையில் மூத்த பிள்ளையார். திரு மும்மணிக் கோவை பாடியவர்.

அதிவாசநம் - சுவாமியை விக்கிரகத்தால் வருவித்துப் பிரதிட்டை செய்தல்.

அதீதா அவத்தை - துரியாத்தம் அவத்தை வகையில் ஒன்று.

அதீதை - 5 கலைகளில் ஒன்று.

அது - ஒன்று, சிவம், அப்போது, சுத்த அவத்தை.

அது அதுதன்- சார்ந்த வண்ணம்.

அது அதுவாய் நின்றறிதல் - சார்ந்தன் வண்ணமாய் நின்றறிதல்.

அது இது - அதுவும் இதுவும் என்னும் பேத நிலை.

அதோ நியமிகா சத்தி - ஆணவ ஆற்றல் இரண்டில் ஒன்று. கீழ்ப்படுத்துவது. பொருள்களின் இயல்பை தவறாக உணரச் செய்வது. அதாவது, உணர்வை மறைப்பது. ஒ. ஆவாரக சத்தி.

அதோ மாயை - கீழே உள்ள மாயை

அதோமுகம் - சிற்சத்தின்ய உணர்த்துவது. முருகனுக்குச் சிவன் அளித்த ஆறாவது முகம்.

அநர்த்தம் - கேடு.

அந(ன)ன்னுவயம் - இயை பின்மை.

அந்தகர் - குருடர்.

அந்தகன்- குருடன், எமன்.

அந்தக்கரணம் - உட்கருவி. மனம், புத்தி, சித்தம், அகங் காரம்.

அந்தக் கரணம், உள் - காலம், நியதி, கலை, வித்தை, அராகம். வேறுபெயர் பஞ்ச கஞ்சுகம் - ஐந்து சட்டை

13