பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருட்பிறிதின் கிழமை

பொறி


 பொருட்பிறிதின் கிழமை - தன்னோடு ஒற்றுமையில்லாப் பொருள். எ.டு. குமரன்வேல்.

பொரும் அறையார் - தவம் மிக்கோர்.

பொருள் - அர்த்தம்

பொருள் 7 - சிவம், பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை.

பொருள் 6 - சிவத்தை நீக்கிய ஏனைய ஆறு.

பொருள் 5 - பதி, பசு, ஆணவம், கன்மம், மாயை.

பொருள் 4 - 1) சிவம், பதி, பசு, பாசம் 2) அறம், பொருள், இன்பம் , வீடு.

பொருள் 3 - பதி, பசு, பாசம்.

பொருள் இயல்பு உரைத்தல் - வரும் பொருள் உரைத்தல். இது மூவகை வாழ்த்துள் ஒன்று.

பொருள் இயல்பு கூறும் - வாக்கியம் பொருளின் இலக்கணம் கூறும் தொடர்மொழி

பொருள் உலகம் - அர்த்தப் பிரபஞ்சம். இதில் புவனமும் (224) தத்துவமும் (36) அடங்கும். மூன்று மாயையிலிருந்து தோன்றுவது. மொழியால் அறியப்படும் பொருள்கள் இதில் உள்ளன. இதில் தனு, கரணம், போகம் ஆகியவையும் உண்டு. தனு, கரணம், புவனம், போகம் ஆகிய நான்கும் மாயையிலிருந்தே உண்டாகுபவை.

பொருள் சொல்லத் தேவை மூன்று - ஒரு பொருளைச் சொல்வதற்கு உத்தேசம், இலக்கணம், பரீட்சை என்னும் மூன்றும் வேண்டும்.

உத்தேசம் : சொல்லப்படும் பொருளைப் பெயர், மாத்திரையால் எடுத்துரைத்தல்.

இலக்கணம் : அப்பொருளின் சிறப்பியல்பை எடுத்துரைத்தல்.

பரீட்சை : அவ்வியல்பு அப்பொருளுக்கு உண்டோ இல்லையோ என ஆராய்தல், உத்தேசம்- இனங்கூறல், இலக்கணம் - இயல்பு.

பரீட்சை - ஆய்வு

பொருள்படா - உண்மை ஆகா.

பொல்லாங்கு - தீங்கு.

பொல்லார் - பொல்லாப்பிள்ளையார், சிவஞான போதம் மங்கல வாழ்த்தில் குறிப்பிடப்படும் கணபதி திருவெண்ணெய் நல்லூரிலுள்ள மெய்கண்டாரின் வழிபடு தெய்வம்.

பொழுது - போது 1) சிறுபொழுது: மாலை, யாமம், வைகறை, விடியல்,நண்பகல், ஏற்பாடு என ஆறு 2) பெரும் பொழுது : பா. பருவம்.

பொள்ளார் - உளியால் பொளிந்து செதுக்கப்படாதது. இயற்கையாகத் தானே தோன்றும் உருவம். சுயம்பு. இதுபொல்லார் என மருவிற்று.

பொற்கை - பொன் கை பொலிவுள்ள கை, எ-டு உற்கை தரும் பொற்கை (திப 68).

பொற்கொழு - பொன்னாலான கொழு, எ-டு பொற்கொழு கொண்டு வரகுக்கு உழுவதேன்? (திஉ38).

பொற்பிதிர் - பசலை.

பொற்பினான் -அழகுள்ளவன், இறைவன்.

பொற்பு -அழகு, பொலிவு. எ-டு பொற்புள்ள இறைவன்

பொறி - இந்திரியம், கருவி. அறிவுப் பொறி 5 தொழிற் பொறி 5. பொறிகள் புலன்கள்

205