பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தர் கொள்கை

மங்கலம்


உலகப் பற்று அறும். அப்பற்று அறுதலே வீடுபேறு என்னும் மையக்கருத்துடையது.மற்றும் உலகம் உள்ளது அன்று; இல்லதும் அன்று. இப்பொருள் தானே தோன்றி அழியும். இதற்கொரு கர்த்தா தேவை இல்லை என்று இம்மதம் கூறும். பா. புத்த உபதேசிகள்.

பெளத்தர் கொள்கை - திருந்த சான்று கிடைக்கும் வரை அறிவை மெய்யென்று ஏற்க முடியாது என்பது இது அறிவின் ஏற்புடைமை.பா.பெளத்தம்.

பெளத்தன் - புத்த சமயத்தான்.

பெளதிக பாவனை- கடவுளை உருவனாகத் தியானித்தல்.

பெளதிகம், பவுதிகம் -1) பூதச்செயல் 2) பூத நூல். இது தற்பொழுது இயற்பியல் எனப்படும்.

பெளதிகத் தீக்கை- உலோக தருமிணி.

பெளராணிகம் - புராணத்தைப் பின் பற்றும் சமயம்.

பெளராணிகர் - உயிர் உருவமுடையது என்னுங் கொள்கை யினர்.

- சிவன்.

மகரம் - மனம் பாமனம்.

மகவு - பிள்ளை.

மகாகாயம் - பெருவெளி.

மகாசகலம் - மத்தியாலவத்தை
ஆன்ம நிலையைச் சார்ந்தது.

மகாசனப் பரிக்கிரமம்-பொது மக்கள் ஒப்புதல்.

மகாசைவம் - சைவம் 16இல் ஒன்று. விபூதி உருத்திராக்கம் தரித்துச் சடை வளர்த்துச் சிவனைச் சற்குணனாகவும் நிர்க்குணனாகவும் தியானிக்க வேண்டும் என்று கூறும் சைவம்.

மகா சைவன் - சிவதீக்கை பெற்றவன்.

மகாரம் - பா. மகரம்.

மகாமுத்திரை - திரிசூல முத்திரையில் தர்ச்சனியை அநாமி கை வளைப்பதாகக் காட்டும் முத்திரை.

மகா ருத்திரன்-பரமசிவன்.

மகாவிரதம்-1) சைவ சமயத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்றான மாவிரதம். 2) சைன விரத வகை.

மகாவாக்கியம் -பெரும் பெயர். அஞ்செழுத்து.பா.தத்துவமசி

மகிமா -8 சித்திகளில் ஒன்று. எல்லா இடங்களிலும் ஒரே காலத்தில் காணப்படுதல்.

மகுடசூளாமணி - திருமுடி மாணிக்கம். எ-டு இறைவன் மகுடசூளாமணியாய் வையம் போற்ற.(சிசிபப2).

மகேச்வரானந்தர் -காச்மீர கெளலசம்பிரதாயத்தினரின் முன்னவர்.
மகேசை - சிவசத்தி.

மகேசுரம் -அறிவு குறைந்து வினை மிகுந்தது.

மகேசுரமூர்த்தி - சந்திரசேகர், உமா மகேசர், இடாபாரூபர் முதலிய 25 கேவல வடிவம்.

மகேசுரர் - பரம் பொருள்.

மகேசுர வடிவம் - இலிங்க வடிவம் ஒத்த சிவமூர்த்தம்.

மங்கலம்-சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு கொடி, இணைக்கயல் என 8.

208