பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவிழ்ந்த

அளவு இறந்து



அவிழ்ந்த - திறந்து நைந்த ஏடு அவிழ்ந்த துணி,அவிழ்ந்து அவிழ்.அவிழ்ந்த மனம்,அவிழ்ந்த சடை (திகப 53) அவிழ இருக்கும் அறிவு (தி.உ 27) சேந்தனார் சிறந்த மெய்யன்பர்.இவர் நைந்த துணியில் கட்டிய அருவருக்கத்தக்க சோற்றையும் அவிழ்சடை வேந்தனார் அமுதாக உண்டார்.

அவிழ்தம் - சோற்றுருண்டை

அவினயம் -நல்லறத்தினின்றும் நீங்கிய நிலைமை.

'அவினாசவாதி-:பொருள் அழியாது என்னும் கொள்கை கொண்டவன்.

அவினாபாவசத்தி - சிவத்தினின்றும் பிரியா ஆற்றல்.

அவினா பாவம்,அவினா விருத்தி -விட்டு நீங்காமை, அவினா விருத்தி அளவை சார்ந்தது. எடுகுடம்மண்ணை விட்டு நீங்காமை

அவுத்திராதி -அவுத்திரி தீக்கை முதலியவை எ-டு அலகில்லாத் திரமயோகம் அவுத்திராதி (சிசி பசு 255) பா. தீக்கை.

அவுத்திரி- அவுத்திரி தீக்கை எடு அநேகம் உள அவற்றின் அவுத்திரி இரண்டு திறனாம் (சிசிசுப 255)

அவை - 1. அவன்,அவள்,அது என்னும் உலகத்தொகுதி இம்முப்பகுப்பில் அடங்கும் 2. கூட்டம்.

அவையடக்கம் - நூல் செய்யும் ஒவ்வொரு ஆசிரியரும் மரபு கருதிக்கூறுவது.மெய்கண்ட நூல்களும் அவையடக்கம் கூறுபவை.

அவைதிகம் – வேதத்தை ஏற்கா மதங்கள். எ-டு உலகாயதம்,பெளத்தம்.அழகிற்சிறந்த கோயில்கள் -1. தேரழகு - திருவாரூர் 2 வீதி யழகு - திரு இடைமருதூர் 3, மதிலழகு - திருவிரிஞ்சை 4.விளக்கழகு - திருமறைக்காடு

அழகு -இது பத்துவகை 1. சுருங்கச் சொல்லுதல் 2விளங்க வைத்தல் 3.நவின்றோர்க் கினிமை 4.நன்மொழியுணர்த்தல் 5.ஓசை உடைமை 6.ஆழ முடைத்தாதல் 7.முறையின் வைப்பு 8.உலக மலையாமை 9.விழுமியது பயத்தல் 10.விளங்கு உதாரணத்தாகுதல்

அழல்-நெருப்பு

அழுந்துதல்-நன்றாய்ப்பதிதல்

அழிதன் மாலைய- அழியுந்தன்மை உடையன.

அழிப்பு- ஒடுக்கம்.

அளந்தறிந்து-புலன்களால் கண்டறிந்து.

அளவன் - அளந்தறிவதற்கு அப்பாற்பட்ட இறைவன்.எ-டு அளவில் அளவில் அளவன் (நெவிது 30)

அளவிலா ஆற்றல் -அளவிடப்படாத வலிமை.

அளவு -எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்.

அளவு இறந்து-அளவுக்கு அப்பாற்பட்டு அளவை:பொருள்:ஆராய்தல்,பிரமாணம் பாகுபாடு : மூவகை 1. காட்சி (பிரத்தியட்சம்) கருதல் (அனு மானம்), உரை (ஆகமம்) . நால்வகை : ஒழிபு, உண்மை, இயல்பு, ஐதிகம்.


25