பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவை இயல்

அறம்32


அளவை பற்றிய விளக்கம் : சைவசித்தாந்த நூல்களில் சிவ ஞான சித்தியாரில்தான் முதன் முதலாக அளவை பேசப்படுகிறது. இதனையடுத்துத் தத்துவப் பிரகாசத்திலும் (14 ஆம் நூற்றாண்டு) பின்னர்ச் சிவாக் கிர யோகியர் இயற்றிய சிவநெறிப் பிரகாசத்திலும் (16 ஆம் நூற்றாண்டு) அளவை கூறப் பெறுகிறது. மறைஞான தேசிகளும் சிவாக்கிரயோகியாரும் அளவை என்னும் சொல்லுக்கு ஒரே வகையிலேயே விளக்கங் கூறுகின்றனர். சிவாக்கிரயோகியர் தரும் சற்றுக் கூடுதலான விளக்கம் பின்வருமாறு. “அளவை என்பது அளந்தறியப்படுவது. அஃது எவ்வாறாகும் எனின்? உலகத்துப் பதார்த்தங்களை எல்லாம் அளக்குமிடத்து எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறு போலப்பதி,பசு, பாசம் முதலிய பொருள்களைப் பக்குவான்மாக்களுக்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு அளவைப் பிரமாணங்கள் முதற்கண் கூறியது அறிக. அல்லாமலும் தர்க்க யுத்தியாயுள்ளவையும் இந்த அளவையினாலேயே சொல்லப்படுவது அறிந்து அர்த்தப்பிரயோகம் பண்ண வேணுமாகையால் முதற்கண் கூறியதெனவும் அறிக” சிவஞான சித்தியாருக்கு உரை செய்த அறுவருள் மறைஞான சம்பந்த தேசிகரும் சிவாக்கிர யோகியரும் அடங்குவர்.

அளி-அன்பு, கொடை, வண்டு. எ-டு அளியில் அளியல் அளியன் (நெவிதூ 30)

அளியன்-வித்துக்கு மேலாயுள்ள அருளுதல் தொழிலுடைய சதாசிவனுக்கு மேலாய் உள்ள பராசத்தி அப்பராசத்திக்குக் காரணமாகிய சிவன்.

அளியில்- பராசத்தி, பரமசிவம்

அற - நீங்க, எ-டு மாசற, மாசறு பொன்னே வலம்புரி முத்தே என்பது இளங்கோ அடிகள் மொழி.

அறத்துறை-அறநெறி

அறநிலைப்பொருள்-நெறிவழி நின்று தத்தம் நிலையில் முயன்று பொருள் ஈட்டுவது அறநிலைப் பொருள்.

அறம்- நல்லது செய்தல், மனமாசு இல்லாத அனைத்தும் அறன். அறம் சிறப்பும் செல்வமும் ஈனும் அதைவிட ஆக்கம் ஒன்றுமில்லை. “மனத்துக்கன் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்" (குறள் 34)

அறப்பாகுபாடு- அறப்பகுதி, அறப்பயன், அறவகை என மூன்று.

அறப்பகுதி-இல்லறம், துறவற என இரண்டு

அறப்பயன்- அறம், பொருள், இன்பம், வீடு என நான்க

அறம் 32 - 1. அறவைச்சோறு 2. அறவைத் துரியம் 3. அறவைப் பிணஞ்சுடுதல் 4, அறுசமயத் தார்க்கு உண்டி 5ஆதுலர்க்குச் சாலை 6 ஆவூரிஞ்சுதறி 7, ஏறு விடுத்தல் 8 ஐயம் 9. ஒவார்க்குணவு 10. கண்ணாடி 11 கண் மருந்து 12. கன்னிகாதானம் 13. காதோலை 14, சிறைச்

27