பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரசவாதம்

இராசதம்


இரசவாதம் - இரும்பு, செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கல், சித்தர்கள் இதில்வல்லவர்கள். இதிலுள்ளகளிம்பை நீக்கினாலே அது பொன்னாகும். வேதி இயல் தோன்ற வழிவகுத்தது.

இரசவாதி - பொன்னாக்கும் கலையில் வல்லவர்.

இரடகலை - சுழுமுனை.

இரட்டுறக் காண்டல் - ஐயக்காட்சி.

இரட்டுற மொழிதல்- ஒரு சொல்லை இரு பொருள்படக் கூறுதல் எ-டு உலகம் பாச உலகையும் அதிலுள்ள உயிர்களையுங் குறிக்கும்.

இரண்டலா ஆன்மா - சிவமாகிய சத்துப் பொருளும் உலகமாகிய அசத்துப் பொருளும் ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்டது உயிர். - தொடர் இரண்டுமிலித் தனி யனேற்கே என்னும் திருவாசகத்தொடரை அடியொற்றி அமைந்துள்ளது. "இருதிறன் அறிவுளது . இரண்டலா ஆன்மா (சிபோ நூபா 7)

இரண்டு - வேறாய்.

இரண்டு - வேறு, இருபொருள்.

இரண்டு அல்லன் - முதல்வன் உயிர்களின் வேறு அல்லன்.

இரண்டு வகை - அறியப்படுவதும் அறியப்படாததும். எடு இரண்டு வகையின் இசைக்கு மன்னுலகே (சிபோ நூபா 6)

இரணிய கருப்பன் - பிரமா,

இரணிய கருப்பவாதம், மதம் - படைத்தல்தொழிலைச் செய்பவனே முதல்வன் (பிரமன்)என்னுங்கொள்கை. இக்கொள்கையினர் இரணிய கருப்பவாதி. இது தற்பொழுது இல்லை.

இரணியம் -பொன்.

இரணியன் - சூரபன்மன் மகன். 'பிரகலாதன் தந்தை திருமாலை இகழ்ந்து இறந்தவன்.

இரதம் -1. சுவை 2. தேர்

இரத்தம் - குருதி, தாது 6 இல் ஒனறு

இரந்திரம் - வழி, வெளி எ-டு எப்பொருட்கும் இரந்தரமாய் இடம் கொடுத்து நீங்காது (சிசிபப 127).

இரவி - ஞாயிறு.

இராகம் - 1. பண் 2. விருப்பம். அதாவது, கிடைக்காத பொருளிடத்து ஆசைப்படுதல். ஆன்ம விளைவுகளில் ஒன்று.

இராகு - ஒன்பது கோள்களில் ஒன்று. பா. நவக்கிரகம், கேது. இராகு, கேது என்னும் இரு கோள்கள் ஏனைய கோள் களைப் போல் தனித்தனியே காணப்படா.அவற்றைக்கோள் மறைவுக்காலங்களில்,திங்களி லும் பகலவனிலும் காணலாம். இவை இரண்டும் நேர் எதிர் எதிராய் நிற்பதால், அவை இரண்டும் உருவின் மறு உருவாய்த் தோன்றும். ஆகவே, அவை சாயாக்கோள்கள் எனப்படும்.

இராகுவின் தலை-9 கோள்களில் இராகுவிற்குத் தலை மட்டும் உண்டு, உடல் இல்லை. கேது விற்கு உடல் மட்டும் உண்டு, தலை இல்லை என்பது புராண வழக்கு

இராசதம் - முக்குணங்களில் ஒன்று.

51