பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமைகோன்

உயிர் எண்ணிக்கை



குரவர்களில் அதிக நூல்கள் இயற்றியவர் இவரே.

அந்நூல்களாவன : 1. சிவப்பிரகாசம் 2. திருவருட்பயன் 3. வினா வெண்பா 4 போற்றிப்பஃறொடை 5, கொடிக்கவி 6.நெஞ்சு விடுதூது 7. உண்மை நெறி விளக்கம் 8. சங்கற்ப நிராகரணம் 9.கோயிற்புராணம் 10. பெளட்காரகம விருத்தி 11. சேக்கிழார் புராணம் 12 திரு முறைகண்டபுராணம் 13.திருப்பதிக் கோவை 14 சிவநாமக்கலி வெண்பா இவர்மெய்கண்டார் மாணாக்கர்.

உமைகோன்-சிவன்

உயர் சிவஞான போதம் - 1 நாற்படிகளில் இறுதி நிலையான ஞானத்தைப் பற்றி ஐயந் திரிபறக் கூறுவது 2. இதனைக் கேட்பதற்கு முன் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் விளக்கும் பத்ததி என்னும் நூல்களை மாணவர் கற்க வேண்டும். 3. பத்ததிகளைக் கற்றதோடு அமையாது, அவற்றின்படி ஒழுகிச் சிவஞான வேட்கைஉள்ளவரே இதனைக் கேட்கத் தக்கவர்கள்.

உயர் ஞானம் - சரியை, கிரியை, யோகம் உடையவரை சாலோக, சாமீப சாருபங்கள் மருவுவது உயர் ஞானம். இது சிவ ஞானமே.

உயர்திணை-உயர்வுள்ள பொருள். எ-டு மக்கள் ஒ. அஃகிறிணை,

உயர்திணைப்பால்கள் - ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று.

உயர் பீசம் - உயர்ந்த மூலம், ஒதி உணர்ந்து ஒழுக்கநெறி இழுக்கா நல்ல உத்தமருக்குச் செய்வது உயர்பீசம்.

உய்த்துணர்தல் - ஒருபொருளை ஆராய்ந்தறிதல்.

உயிர்-அணு, ஆன்மா, உயிர்ப்பு இதன் குணங்கள் : 1. அறிவுடைமை 2. விருப்பமுடைமை 3. ஆற்றலுடைமை.இது மூலாதாரத்தில் செல்லாது. துரியத் தானமாகிய உந்தியோடு நிற்பது. ஒ. ஆன்மா. உயிர் ஊழ் உயிர் நுகர்ச்சி.

உயிர்த்தல் - தொழிற்படுதல்,மூச்சு விடுதல்.

உயிர்ப்ப- உயிர்ப்பதை.

உயிர்ப்பு - மூச்சுக்காற்று.

உயிர் அளவு - இதுபற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. 1. உயிர்கள் அணுவின் அளவினது என்பர். பாஞ்சராத்திரிகள். இதனைச் சித்தாந்தம் ஏற்பதில்லை. 2. உடம்பளவில் உயிர் நிறைந்து அறியும் என்பர் சமணர்கள். இதனையும் சித்தாந்தம் மறுக்கும். இறைவனைப் போல, உயிரும் எங்கும் பரவியது. ஆயினும், கட்டு நிலையில் அதன் பரவல் மீண்டும் நிரம்புகிறது என்பது சித்தாந்தம்.

உயிர் இயல்-மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்

உயிர் எண்ணிக்கை-ஊற்றமிகு தாவரங்கள் 19 இலட்சம். ஊர்வன 15 இலட்சம். அமரர் 11 இலட்சம், நீர் வாழ்வன 10 இலட்சம், பறப்பன 10 இலட்சம் நாற்காலிகள் 10 இலட்சம், மானிடர் 9 இலட்சம் ஆக 84 இலட்சம் (சிபி 47).

63