பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணழித்தல்

கமர்


கண்ணழித்தல் - கூறிடல்.

கண்ணாம் - அறிவாம்.

கண்ணி - கருதி.

கண்ணிய - அறிவதாகிய.

கண்ணன் - திருமால்.

கண்டு - 1. படைத்து 2 பட்டறிவிலிருந்து அறிந்து.

கண்டுணர்தல்-ஆராய்ந்தறிதல்.

கண்ணுதல் - கருதுதல்.

கண்படல் - உறங்கல்,கனவிலா-உறக்கம்.

கண்பேறு - கண்ணின் சிறப்பு, மெய், வாய், மூக்கு, செவி ஆகிய நான்கும் தம்மிடம் வந்த பொருள்களை மட்டும் பற்றும்.ஆனால் கண்ணோ பொருள்களைச் சென்றும் நின்றும் அறிவது. உயிர் உணர்வோடு விரவியும் நிற்பது. இதுவே அதன் பேறு.

கண் வாசகம் - திருநோக்கு, பரிசம், வாக்கு எனப்படும் தீக்கை.

கண்ணார் - குருடர்.

கண்வலை -கவர்ச்சி வலை.

கணிதம்-நாராயணியம், வாராகம் முதலியவை.

கணிதர் - கணிப்பவர். எ-டு கடி வின்றியே கணிதர் (சிசிபப 199)

கணித்தல்-மானதமாகச் செய்தல்

கணை - வில்.

கத்தும் சமயக்கணக்கு - புற சமயத்தவர் கூறும் புன்மைக் கோவை,

கதம் - சீற்றம்

கதம் என- 'சட்டென.

கதி - 1. நிலை, தேவகதி, மக்கள் க்தி, விலங்கின் கதி நரகதி என நான்கு வகை 2 பிறப்பு 3 ஞா னம் (வீடுபேறு)

கதிர் - ஞாயிறு, ஒளி,

கதிர்வாள் - கருக்கரிவாள்.

கந்தம் - 1 நாற்றம் : ஐம்புலன் களில் ஒன்று 2 கிழங்கு கந்தம் மூலம் புசித்தல் 3.கந்தம் பூசுதல்: வழிபாட்டு முறைகளில் ஒன்று. கந்தம் ஐந்து - பா. ஐந்து கந்தம்.

கந்த புராணம் - முருகன் புகழ் புகல்வது. அரும்பெரும் புராணம் 3 இல் ஒன்று. பொதுப் புராணம் 18 இல் ஒன்று.

கந்தழி-ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகத்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள். தொல் காப்பியத்தில் கூறப்பெறுவது.

கந்தரம்-கழுத்து. எடுகந்தரத்து அமைந்த அந்த இல் கடவுள் (சநி 2).

கந்தித்தல் - நாறுதல்

கப்பு - கவர்ச்சி.

கபிலதேவ நாயனார் - 11 ஆம் திருமுறையில் பின்வரும் நூல்களை அருளியவர்: 1. மூத்த நாயனார் திரு இரட்டைமணி மாலை 2. சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை 3. சிவ பெருமான் திருவந்தாதி இத்திருமுறை நூல்கள் 40 ஐ இயற் றியவர்கள் 12 பேர்.

கபிலர் - உருத்திரர்.

கபிலன் - சாங்கிய மதாச்சாரியன் எ-டு இவ்வுரை கபிலன் சொல் ஆகுமது (சிசி பட 195).

கமலம் - தாமரை

கமலன் தாள் - பிரமன் திருவடி கமல முனிவர் - 18 சித்தர்களில்ஒருவர்.

கமர் - வயல்வெடிப்பு. வயல் வெடிப்பில் சிந்திய செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு என்

83