பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டயர்ந்த காந்தள்” (தொல். புறத். நூ. 63)

என்பன இங்கு ஒப்பு நோக்கியுணரத்தக்கனவாகும்.

பண்டைநாளில் வாழ்ந்த மக்கள், காக்கை,பல்லி முதலிய அஃறினையுயிர்களின் இயக்கங்களையும் குரல்களை யும் தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தொடர்புடையனவாகக் கூர்ந்து உணர்ந்திருந்தனர். காக்கை கரைதல், கரிக்குருவி முதலிய அஃறினையுயிர்களின் செயல்களைத் தமக்கு எதிர்காலத்தில் நேரவிருக்கும் நற்செயல் தீச்செயல்களின் நிமித்தமாகக் கொண்டனர். தாம் எண்ணிய செயலைத் தொடங்குதற்கும் தவிர்தற்கும் மக்கட் கூட்டத்தாரிடையே இயல்பாகத் தோன்றும் நற்சொல்லையும் தீச் சொல்லையும் நிமித்தமாக எண்ணினர். முருக பூசை பண்ணும் வேலன் முதலியோரைக் கொண்டு நிகழ்த்தும் வெறியாடல், கட்டுவிச்சி யென்னும் கனிமகளைக்கொண்டு கட்டும் கழங்கும் இட்டுரைத்தல் முதலிய தெய்வக் குறிப்புக்களால் சென்ற காலத்தில் நிகழ்ந்தது, நிகழ்காலத்தில் நிகழ்வது, எதிர்காலத்தில் நிகழவிருப்பது ஆகிய முக்கால நிகழ்ச்சிகளை யறிந்துகொள்ளுதலும் வானின்கட் காணப்படும் விண் மீன்கள் கோள்கள் ஆகியவற்றால் இவ்வுலகில் நிகழவிருக்கும் இயற்கைம ற்றங்களை முன்னரே உய்த்துனர்ந்துரைத்தலும் ஆகிய ஆற்றல் படைத்தவர்களாக வாழ்ந்தார்கள். இச்செய்தி,

“தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி

மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சஞ்சார்தலென்று அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றொடுவிளக்கி’ (தொல். அகத். 40)

எனவும், பக்கத்துவிரிச்சி (தொல். புறத்.3) எனவும், 'வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் (டிெS) எனவும், குடையும் வாளும் நாள்கோள் (டிெ. 11) எனவும், மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின்ஆற்றிய அறிவன் தேயமும் (டிெ 36) எனவும், கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும், ஒட்டியதிறத்தாற் செய்திக் கண்ணும் (டிெ களவியல் 25)