பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

125


முதலிய விலங்குகளும் நிமித்தமாகக் கொண்டன என்பது,

"முதைச் சுவற்கலித்த மூரிச்செந்தினை

ஓங்குவரைப் பெருங்குரல் உணிஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிபாடோர்த்துக் குறுகும் புருவைப்பன்றி” (அகம். 88)

எனவும்,

“எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்திற்

செய்ம் மேவற் சிறுகட் பன்றி ஓங்குமனை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி நூழை நுழையும் பொழுதிற் றாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லிபட்டென மெல்ல மெல்ல பிறக்கே பெயர்ந்துதன் கல்லளைப் பள்ளி வதியும் நாடன்” (நற். 98)

எனவும் வரும் சங்க விலக்கியப் பகுதிகளில் விரித்துரைக்கப் பட்டது. உயர்ந்த மலைப்பகுதியில் ஓங்கி வளர்ந்த முற்றிய செந்தினையின் பெருங்கதிர்களை உண்ணுதற்கு விரும்பிய பன்றியானது தினைப்புனங்காவலராகிய குறவர்களால் தனக்கு இடர் நேராமை கருதிப் பல்லியின் நற்சொல்லினை ஒர்த்துக் கேட்டு அதனையே நன்னிமித்தமாக நம்பித் தினைப்புனத்தை அணுகியது என்ற செய்தி 88ஆம் அகப்பாடலிலும், இரவில் தினைப்புனத்திற் குறுகித் தினைக் கதிர்களைத் தின்றழிக்கும் பன்றியைப் பிடித்தற்கெனக் குறவர்கள் புனத்தின் முகப்பில் இயந்திரப் பொறி வைத்துள்ளமை யறியாது அப்பொறி வாயிலில் நுழையும் பன்றி அப்பொழுது பக்கத்தே பல்லி சொல்லிய சொல்லினைக் கேட்டுத் தனக்கு நேரவிருக்கும் தீங்கினை யுணர்ந்து அப்பொறியினின்னும் தப்பி மெல்ல மெல்லப் பின்வாங்கித் தான் வாழும் கல் முழையில் வந்து தங்கியது என்ற செய்தி நற்றினை 98ஆம் பாடலிலும் புனைந்துரை வகையால் இடம் பெற்றுள்ளமை பல்லி சொல்லுக்குப் பயன் உண்டு என்னும் பண்டைக்கால மக்களது நம்பிக்கையினை நன்கு வற்புறுத்தல் காணலாம்.