பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

127


நற்சொல் சொல்லுகின்றது; எனவே, அரிய பொருள் கருதிப் பிரிந்த நின் தலைவர் நினது இழையணிந்த தோளை அணையவிரும்பி இங்கு வந்து சேர்வர். எனவே நின் மனக்கவலை நீங்குவதாக எனத் தலைமகளை வற்புறுத்துவ தாக அமைந்தது முற்சுட்டிய நற்றிணைப் பாடலாகும்.

தலைவன் பொருளிட்டி வருதற்குப் பிரிந்தானாக, பிரிவாற்றாது வருந்தும் தலைமகளை நோக்கி ஆறுதல் கூறும் தோழி, மிகவுயர்ந்த புகழ்வாய்ந்த நல்ல மனையின்கண்ணே சுவரிடத்தே பொருந்தியிருக்கும் விரும்பத்தக்க குரலை யுடைய பல்லி அவரை நினைக்குந்தொறும் நள்ளிரவிலும் நற்சொற் சொல்கின்றது; திருந்திய எனவே, அரிய பொருள் கருதிப் பிரிந்த நின்தலைவர் நினது இழையணிந்த தோளை அனைய விரும்பி இங்குவந்து சேர்வர். எனவே நின் மனக் கவலை நீங்குவதாக எனத் தலைமகளை வற்பறுத்துவதாக அமைந்தது,

కథ

அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து திருந்திழைப் பனைத்தோள் பெறுநர்போலும் நீங்குகமாதோ நின் அவலம் ஓங்குமிசை உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி நயவரு குரல பல்லி நள்ளென் யாமத்துள்ளு தொறும்படுமே” (நற். 333)

எனவரும் நற்றினைப் பாடற் பகுதியாகும். இங்கெடுத்துக் காட்டிய குறிப்புக்களால் சங்ககாலத் தமிழ் மக்கள் பல்லி சொல்லினை நிமித்தமாகக் கொண்டிருந்தார்கள் என்பது நன்கு புலனாதல் காணலாம்.

வீட்டில் காக்கை கரைந்தால் அன்புடைய விருந்தினர் வருவர் என்பது, தமிழகத்தில் தொன் றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கையாகும். தன்னால் வளர்க்கப்பெற்ற தலைமகள் தான் விரும்பிய காதலனுடன் உடன் போக்கிற் சென்றாளாக அவளது பிரிவாற்றாது வருந்திய செவிலி, அவள் தன்னுடைய காதலுடன் மீண்டுவருதல் வேண்டும் எனக் காக்கைக்குப் பலிக்கடன் நேர்வதாக உரைப்பது,