பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

149


நாட்டினை விட்டு அப்புறப்படுத்துதற்குரிய முன்னறிவிப் பாகப் பகைவர் நாட்டிலுள்ள பசுக் கூட்டங்களை நள்ளிரவிற் கவர்ந்து வரும்படி, தம் படைவீரர்களை ஏவுதல் அறத்தின் வழிப்பட்ட போர்த் தொடக்கமாகத் தமிழ் மக்களாற் கொள்ளப்பட்டது. இவ்வாறு வேந்தனால் ஏவப்பட்ட படைவீரர்கள் தமது ஒழுகலாற்றுக்கு அடையாளமாக வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு நள்ளிரவிற் பகைவர். நாட்டின் எல்லையுட் புகுந்து அங்குள்ள பசுநிரைகளைக் களவினாற் கவர்ந்துகொண்டு வருதல் போர்த்தொடக்க மாகிய வெட்சித் திணையாகக் கொள்ளப்பட்டது. இங்ங்னம் நாடாளும் வேந்தனது ஆணையின்றிச் சுரத்திடையே வாழும் ஆறலை கள்வர்கள் நள்ளிரவில் ஊருட் புகுந்து பசுநிரை களைக் கொள்ளையடித்துச் செல்லுதலும் உண்டு.

இவ்வாறு ஊர் மக்கள் சோர்வுற்று உறங்கும் நள்ளிரவிலே பகைவருடைய படைவீரர்களாலும் ஆறலை கள்வர்களாலும் தம்மூரிலுள்ள பசுநிரைகள் கள விற் கவரப்பட்டுச் செல்லும்போது அவர்களை வழிமறித்துப் பசுநிரைகளை விரைந்து மீட்டுக் கொணர்தல் அந்நாட்டில் வாழும் தறுகண் வீரரது தலையாய கடமையாயிற்று. தம் ஊரவர் உடமையாகிய பசுக்களைப் பகைவரிடமிருந்து மீட்டுக் கொணர் தற்குச் செல்லும் வீரர்கள் கரந்தைப் பூவினை அடையாளமாகச் சூடிச்செல்வர். அதுபற்றி அவர்கள் கரந்தை மறவர்’ என அழைக்கப்பட்டனர். தம் நாட்டுப் பசுக்கூட்டத்தினை மீட்டுக் கொனர் தற் பொருட்டுப் பகைவரொடு பொருது உயிர் துறந்த மறவரது பெயரும் பீடும் பொறித்து நடப்பட்ட நடுகல்லின்மேல், அந்நாட்டு வீரர் அனைவரும் மாலையும் மயிற் பீலியும் அணிந்து தோப்பி நெல்லாற் செய்த கள்ளுடன் துரு வென்னும் ஆட்டினையும் பலிகொடுத்துத் தெய்வமாக்கி வழிபடுவர். இச்செய்தி,

“முன்னுர்ப்பூசலிற் றோன்றித் தன்னுார்

நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணையாக வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து