பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வில்லுடன் அம்பினை ஏந்தியவனே சுழலும் படையாகிய பாராவளையினை (வட்டப்படை யுடையவனே வாட்படை யினையுடையோனே! என இவ்வாறு அழகிய சீரையும், அஞ்சப்படுதலையும் உடைய வேதம் தனக்கு நன்மையை விரும்பி அவ்விரு பெருந்தெய்வப் பெருமை ஈதென்று சொல்லுதலால் யாமும் மனம் விரும்பி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப் பெரும் புகழை யுடைய அவ்விருவரையும் தொழுது எமக்கு இவ்விருங் குன்றத்தின் அடியின்கண் உறைதல் எய்துக என்று வேண்டு கின்றோம்” என இளம்பெருவழுதியார் பெரும்பெய ரிருவலரயும் பரவிப் போற்றுகின்றார்.

மேகங்கள் மழை பொழிய அந்நீர் மலைகளினின்றும் இழிந்து மதுரையிலுள்ளார் எதிர்கொள்ளும்படி வருகின்ற துறையினிடத்தே யமைந்தது இருந்தையூர் ஆகும். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் திருமால் இருந்தவளமுடையார் எனப் போற்றப்படுகின்றார்.

ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேடனைப் ‘பூமுடிநாகர்’ எனப் பரிபாடல் போற்றுகின்றது. மதுரையின் அருகே இருந்தையூரிற் கோயில் கொண்டருளிய திருமாலின் கோயிலையடுத்து ஆதிசேடனுக்குக் கோயில் அமைந் திருந்தது. பூமுடிநாகராகிய ஆதிசேடன் கோயில் பெருங் குளத்துக்குப் புனல்புகும் வாயிலையடுத்து அமைந்திருந்தமை யால் அது குளவாயமர்ந்தான் நகர்’ எனப் பரிபாடலிற் குறிக்கப் பெறுவதாயிற்று. நிறம் வாய்ந்த புள்ளிகளையுடைய பெரிய படமாகிய எருத்தின்கண்ணே மலையினைத் தாங்கிய செல்வனாகிய ஆதிசேடனுக்கென அமைக்கப்பெற்ற அத் திருக்கோயிலே இளையோர் முதல் முதியோர் வரையுள்ள இருபாலாரும் படைத்தற்குரிய அவியாகிய உணவு குடை, நறும்புகைப்பொருள், நறுமலர்கள் ஆகியவற்றை ஏந்தியவர் களாய் நெருங்கி இன்னியம் முழங்க இயலிசைப் பாடல் களைப் பாடியும் ஆடல்களை நிகழ்த்தியும் இடைவிடாது வழிபட்டு மகிழ்ந்துறைகின்றனர். அதனால் அத்திருக்கோயில் நல்வினைப் பயன்களை நுகர்ந்து மகிழ்தற்கிடனாகிய துறக்கவுலகம் போன்று விளங்கியது.