பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

187


தோன்றலியல்பு. அந்தணர்களாற் காக்கப்படும் அறமாகவும், அடியார்களிடத்தே தோன்றும் அன்பாகவும், நெறியின் வழிஇயினாரைத் திருத்தியாட்கொள்ளும் மறக்கருணை யாகவும் பகைவர்களிடத்தே செலுத்தும் வருத்துந் தொழிலாகவும் திகழுவோன் திருமாலே. வானத்தில் விளங்கும் திங்களாகவும், கதிரவனாகவும் திகழ்வோன் அவன். ஐந்து திருமுகங்களையுடைய இறைவனாகவும் அவனாற் செய்யப்பெறும் உலகவுயிர்களின் ஒடுக்கமாகவும் நற்பொருட் களைத் தன்னகத்தே கொண்ட குற்றமற்ற அறிவினைத் தரும் வேதமாகவும் நான்முகனாகவும் அவனாலாகிய உலகவுயிர் களின் தோற்றமாகவும் திகழ்வோன் திருமாலே. வானத்து வலமாக எழும் மேகமும், வானமும், நிலமும், இமயமலையும் என இங்ங்னம் எல்லாப் பொருள்களாகவும் தோற்ற மளிப்பவன் அவனே. அம்முதல்வன் தனக்குவமை யில்லாதவன்; அழிவற்ற புகழோன்; பொன்னாடை யணிந்தோன்; கருடக்கொடியுடையோன். சங்கு, பகைவரை யழிக்கும் சக்கரப் படையினை ஆகியவற்றை ஏந்தியவன். நீலமணி போலும் திருமேனியுடையோன். புகழினையும், அழகிய மார்பினையும் உடையவன் எனப் பரிபாடல் திருமாலைப் போற்றுகின்றது.

முழுமையாகக் கிடைத்துள்ள பரிபாடல்களில் 1, 2, 3, 4, 13, 15 ஆகிய ஆறு பாடல்கள் திருமாலைப் போற்றுவனவாக அமைந்துள்ளன. அவற்றுள் முதற்பாடலை இயற்றிய ஆசிரியர் பெயரும், இசையமைத்தோர் பெயரும் கானப்படவில்லை. கீரந்தையாரால் பாடப்பெற்ற நன்னாகனாரால் இசை யமைக்கப்பெற்றது இரண்டாம் பரிபாடல். அது பாலையாழ் என்னும் பண்ணமைந்ததாகும். கடுவன் இளவெயினனாராற் பாடப்பெற்றுப் பெட்ட நாகனாரால் இசையமைக்கப் பெற்றவை மூன்றாம் பரிபாடலும், நான்காம் பரிபாடலு மாகும். இவ்விரண்டும் பாலையாழ்ப் பண்ணில் அமைந்தனவே. நல்லெழிநியாராற் பாடப்பெற்றது 13ஆம் பரிபாடல். அதற்கு இசையமைத்தோர். இன்னார் என்பது தெரியவில்லை. இதற்குப் பண் நோதிறம் எனச் சுவடிகளில் காணப்பெறுகிறது. இளம்பெருவழுதி யாராற் பாடப்பெற்று மருத்துவன் நல்லச்சுதனாரால்