பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

191


ஒருகுழை யவன்மார்பில் ஒண்டார்போல் ஒளிமிகும் பொருவறப்பொருந்திய செம்மறு வெள்ளையும்”

(கலி. 105)

எனவும் வரும் முல்லைக் கலித்தொடர்களில் திருமால், பலதேவன் ஆகிய இருவரது தோற்றமும் உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளமை காணலாம்.

ஆயர்களால் ஏறுதழுவுவதற்கென விடப்பட்ட எருதுகளுள் கரிய எருதிற்குத் திருமாலையும் அதன் தெளிந்த நெற்றியில் விளங்கும் சுட்டிக்குத் திருமால் கையிலுள்ள சங்கினையும் செந்நிறப்புகள் நீண்டு பொருந்திய வெள்ளை எருதிற்குச் சிவந்த மாலையினை மார்பிலரிைந்த நம்பி மூத்தபிரான் ஆகிய பலதேவனையும் உவமையாக நல்லுருத்திரனார் குறிப்பிடுவர்.

முல்லைநிலத்துக் கோவலர் தம்மால் மேய்க்கப் பெறும் ஆநிரைகள் பாற்பயன் தருதல் வேண்டித் திருமாலைப் பரதவிப் போற்றுதலும், தம்மகளிரைத் தகுதியுடைய தலைவருக்கு மனம் செய்து கொடுத்தல் வேண்டி வலிய காளைகளை வளர்த்துக் கொல்லேறு களாகிய அவற்றை அடக்கிப் பிடிக்கும் தறுகண்மை மிக்க ஆடவனுக்குத் தம் மகளை மனம் செய்து கொடுத்தலும் ஆகிய ஒழுகலாறு உடையராய் மாயோனைத் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்தனர். முல்லை நிலத்து மகளிராகிய ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடி மாயோனை வழிபடு கடவுளாகக் கொண்டு போற்றினர். இச்செய்தி,

§ {

குரவை தழீஇ யாம் மரபுளிபாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னிலம் ஆளுங் கிழமையொடு புணர்ந்த எங்கோ வாழியரிம் மலர்தலையுலகே (கலி. 103) எனவும்,

"ஆங்குத்

தொல்கதிர் திகிரியாற் பரவுதும் ஒல்கா