பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

239


இங்ங்னம் மனையகத்தே வேலனைக் கொண்டு நிகழ்த்தும் வெறியாடலில் வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய்க்கு அதன் பொய்ம்மையைப் புலப்படுத்தும் நிலையில் அகத்தினைச் செய்யுட்கள் காணப்படுகின்றன.

“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி

அறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமணங் கொள்குவை யன்னையிவள்

புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே” (ஐங் 243)

எனவரும்பாடல் வேலன் கூற்றினை மெய்யென நம்பிய தாயை நோக்கி அவளது அறியாமை கூறி தோழி வெறி விலக்கும் வகையில் அமைந்ததாகும். வெறியாடல் துணிந்துழி அதனை விலக்க எண்ணிய தோழி செவிலி கேட்குமாறு தலைமகட்குச் சொல்வதாக அமைந்த பாடல்களும் உள்ளன.

"அம்ம வாழி தோழி பன்மலர்

நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடா னாயின் என்பயன் செயுமோ வேலர்க்கு வெளியே” (ஐங், 244)

எனவரும் இப்பாடல் முருகனைப் போற்றி வெறியாடல்

நிகிழும் வழி தலைமகளது மெலிவுக்குக் காரணமாகிய

தலைவனது மலையையும் வேலன் சிறப்பித்துப்

பாடுவானாயின் இவ்வெறியாடலாற் பயனுண்டு என்னும்

கருத்தினைப் புலப்படுத்துவதால் வெறிவிலக்கல் என்னும்

துறைக்கு இலக்கியமாயிற்று.

"பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத்தன்னைக்கு

முருகென மொழியும் வேலன் மற்றவன் வாழிய விலங்கு மருவிச்

சூர்மலைநாடனை யறியாதோனே.” (ஐங். 249)

எனவரும் பாடல், வேலன் கூறிய மாற்றத்தை உண்மை என நம்பிய தாய் கேட்கும்படித் தலைமகளுக்குத் தோழி