பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"வல்லோன் தைஇய வரிப்புனைபாவை

முருகியன்றன்ன உருவினையாகி" (மதுரைக்.723-724)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடர்."ஓவியத் தொழில் வல்லான் ஒருவன் எழுதிக் கைசெய்த பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்ந்தாற் போன்ற பொலிவு பெற்ற வடிவினையுடையவன்ே!” என மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனது தெய்வ வழிபாட்டுத் தோற்றத்தைப் புனைந்திருக்கின்றார். இத் தொடரில் அமைந்த முருகு என்னும் சொல் தெய்வத் தன்மை என்ற பொருளில் ஆளப் பெற்றது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். திருமுருகாற்றுப்படை உரையிலும் முருகு என்னும் சொல்லுக்குத் தெய்வத் தன்மை எனவே உரை வரைந்துள்ளார். முருகு என்பதற்கு நறுமணம் என்னும் பொருளும் உண்டு.

డá - 条 & 95 முருகமர் பூமுரண் கிடக்கை

என்பது பட்டினப்பாலையாகும். மலரிடத்தே உள்ளிருந் தெழும் நறுமணம் போன்று உயிர்களின் உள்ளத்தே உள்ளிருந்தெழுவதே தெய்வ வழிபாட்டுனர்வாகும். முழுமுதற் கடவுளாகிய தெய்வம் மன்னுயிர்களின் உடம்பிலும் உயிரினும் ஒழிவின்றி நிறைந்து நிற்றலும் இங்ங்னம் உலகப் பொருள் தோறும் பிரிப்பின்றி விரவி யிருப்பினும் அவற்றைத் தனக்குச் சார்பெனக் கொள்ளாது எல்லாப் பொருட்குந் தானே சார்வாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்றலும் ஆகிய தெய்வத் தன்மையினைப் புலப்படுத்தும் நிலையில் மணங்கமழ் தெய்வமாக வழிபடப் பெறுபவன் முருகனாதலின் முருகு என்பதற்குத் தெய்வத் தன்மை எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். இக்கருத்திற்கு அரண் செய்யும் நிலையில் அமைந்தது,

"உற்றவாக்கையினுறுபொருள் நறுமலரெழுதரு

நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்”

எனவருந்திருவாசகத் தொடராகும்.