பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

289


இதன்கண் மணமாகாத இளம் பருவத்தினராகிய தோழியும் தலைவியும் சுனையிலுள்ள மலர்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும் செங்காந்தள் மலர் கொய்து கண்ணியாகச் சேர்த்தியும் முருகப் பெருமானது வழிபாட்டிற்கு உதவிய திறம் நன்கு புலனாகும்.

தலைமகன் சிறப்புறத்தானாகத் தோழி தலைமகட் குரைப்பாளாய் வெறியறிவுறுத்தி வரைவுகடாவும் நிலையிலமைந்தது நற்றிணை 288 ஆம் பாடலாகும். உயர்ந்த மரக்கிளையில் உள்ள மயிர் தன் தோைைகயை விரித்து இளவெயில் காண வேண்டி நெடியமலைச் சிகரத்தின் பக்கத்திலே தன் பெடையொடு தங்கும் மலைநாடனாகிய தலைவன் பிரிதலினாலே நினது நுதலில் படர்ந்த பசலையை நோக்கி அல் எ செம்முது பெண்டிருடனே தன் மனையிற் புகுந்து கட்டுவிச்சியைக் கொண்டு நெல்லை முறத்தில் பரப்பி, நட்டுவைத்து நின் மெலிவுபற்றிக் குறிகேட்குமானால், அக்கட்டுக்குறியானது புனத்திலே தினையின் கதிர்களைக் கொய்து கொண்டு போகும் கிளிகளை வெருட்டுவோமாகி நாம் சென்றிருந்தும் அந்நிலையில் எதிர்ப்பட்ட தலைவனது பிரிவினால் நினக் கேற்பட்ட மெலிவினையறியாது இவள் முருகவேள் இருக்கும் இடத்தருகே சென்றதனால், முருகவேள் வருத்தியவருத்தமின்றி மாறாகக் கூறிவிடுமோ? எனத் தோழி தலைமகளை நோக்கி வினவும் நிலையில் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்குத் தலைவியின் மெலிவு குறித்து வெறியாடல் நிகழும் என்பதனை அச்சத்துடன் புலப்படுத்தும் முறையில் இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது. இதனால் தலைவியின் வாட்டம் கண்டு வெறியாடல் நிகழ்த்த எண்ணிச் செவிலி கட்டுவிச்சியைக் கொண்டு குறிபார்த்து அக்குறி தெய்வத்தினான் நேர்ந்த தெனப் புலப்படுத்திய பின்னரே வெறியாடல் நிகழ்த்தற்கு ஏற்பாடு செய்யும் மரபுண்மை புலனாகும்.

“தாமரை புரையும் காமர் சேவடி

பவழத் தன்ன மேணித் திகழொளிக் குன்றி யேயக்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற்

கை. சி. சா. வ. 19