பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வெறுப்பின்றி நிற்றல் பற்றி அவன் செய்தனவாக வேலன் ஏத்தும் புராணச் செய்திகள் யாவும் ஒன்றிற் கருத்திருத்திச் செய்யும் முறையில் அவனால் செய்யப்பட்டன அல்ல என்பதும், அவையனைத்தும் அவன் அருளின் வழி நிகழ அவன் அவற்றிற்றோய்வின்றி விளங்குகின்றான் என்பதும், மேற்காட்டிய தொடரின் கருத்தாகும். ஏனோர் சிறப்பினுள் உயர்வாகலும் பிறப்பினுள் இழிவாகலும் தின் வலத்தினதே" எனவரும் தொடர், பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பினார் குறித்த இறை இயல்பினை அறிவுறுத்தும் நிலையிலமைந்துள்ளது. முழுமுதற் கடவுளாகிய நின்னை யொழிந்த மன்னுயிர்கள் நல்வினையாற் சிறப்பினைப் பெற்று உயர்தலும், தீவினையாற் பிறப்பினை அடைந்து தாழ்தலும் ஆகிய இந்நிகழ்ச்சிகள் நினது அருளானையின் வரம்பின் உட்பட்டு நிகழ்வனவே என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இதனால் இவ்வுலகில் மன்னுயிர்கள் செய்யும் நன்றும் தீதுமாகிய இருவினைகளால் ஆகிய இன்ப துன்பங்களாகிய பயன்களை வினை செய்த உயிர்களே நுகரும் வண்ணம் எய்துவிக்கும் ஆற்றல் முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனுக்கே உரியதென்பது, தொல்காப்பியனார் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் கண்டுணர்த்திய தத்துவ உண்மையாகும். இவ்வுண்மையை மேற்காட்டிய பரிபாடற் றொடரும் வலியுறுத்துவதைக் காணலாம். ஏனோர் நின் வலத்தினதே" என்னும் அடியில் ஏனோர் என்னும் சொல் இறைவனை ஒழிந்த ஏனைய உயிர்த் தொகுதியினையும் நின்’ என்ற சொல் ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனையும், வலம்’ என்ற சொல் அம் முதல்வனது அருளாகிய ஆணை என்னும் சிற்சத்தியினையும் குறித்து நின்றன. முழுமுதற்கடவுளாகிய முருகனது அருளானை உயிர்களின் இருவினைகளின் வழிநின்று அவற்றின் பயன்களாகிய சிறப்பினையும் பிறப்பினையும் உயிர்கட்கு எய்துவிக்கின்றது என்னும் இத்தத் துவக் கொள்கையினை “அவையே தானேயா யிருவினையிற், போக்குவரவு புரிய ஆணையின், நீக்க மின்றி நிற்குமன்றே” எனவரும் சிவஞானபேர்த இரண்டாஞ் சூத்திரத்தில் ஆசிரியர் மெய்கண்டார் ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்து விளக்கியுள்ளார்.