பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

303


உண்டாகிய தன்மையினையும் முருகனருள் பெற்ற அம்மகளிர் தம் கண்வரொடு துன்பம் நீங்கி மகிழ்ந்திருக்கும் திறத்தையும் விரித்துரைக்கும் முறையிலமைந்தது. 90 முதல் 123 வரை அமைந்த இப்பாடல் பகுதியாகும். இங்ங்னம் முருகப் பெருமான் எழுந்தருளிய பரங்குன்றைப் புனைந்துரைக்கும் முகத்தான் அம்முதல்வனை எதிர்முக மாக்கியும், படர்க்கையாக்கியும் அவனையே வாழ்த்தி நிறைவு பெறும் நிலையிலமைந்தது, . . . .

'உடம்புணர் காதலருமல்லாருங் கூடிக்

கடம்பமர் செல்வன் கடிநகர் பேண

மறுமிடற் நண்ணற்கு மாசிலோ டிந்த

நெறிநீ ரருவியசும்புறு செல்வம்

மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா

தண்பரங்குன்ற நினக்கு” (பரி.8, 125-130)

எனவரும் பகுதியாகும். “பரங்குன்றமே தம்முட் பிரியாத காதலர்களாகிய மகளிரும் மைந்த்ரும், அவர்களல்லாத வரம் வேண்டுவோர் பிறரும் கூடிக் கறை மிடற்றிறைவனுக்குத் தூய்மையே உருவாகிய உமையம்மமையார் தந்த புதல்வனாகிய கடப்ப்மலரையணிந்த செவ்வேள் எழுந்தருளிய திருக்கோயிலை வழிபட்டு மகிழ நிலவுலகம் வெயில் வெப்பத்தால் வருந்த மழை பெய்யாது போயினும் பல இடங்களிலும் அருவிநீர் சொரியும் நீர்வளமாகிய செல்வம் நினக்கு என்றும் குன்றாது நிலை பெறுவதாகுக!” என ஆசிரியன் நல்லந்துவனார் முருகப் பெருமான் எழுந்தருளிய வளமார்ந்த திருப்பரங்குன்றத்தை வாழ்த்திப் போற்றும் நிலையிலமைந்தது மேற்காட்டிய பாடற் பகுதியாகும். இங்ங்னம் ஆசிரியன் நல்லந்துவனார் பாடிய பரிபாடலாற் சிறப்பிக்கப் பெற்றது திருப்பரங்குன்றம் என்பது,

“அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை”

எனவரும் அகநானூற்றுத் தொடராற்புலனாகும். மறுமிடற்றண்ணற்கு மாசிலோள் தந்த கடம்பமர் செல்வன் என வரும் பரிபாடல் அடிகளைத் தழுவி அமைந்தது “நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” எனவரும் அப்பர்