பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தேவாரமாகும்.

பரங்குன்றத்துச் செவ்வேளைப் பரவிப் போற்றும் நிலையிலமைந்தது குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பரிபாடல் ஆகும். இருநிலம் துளங்காமல் வடதிசைக் கண்ணே நிலைபெற்று ஓங்கி இந்திரனாற் காக்கப்படும் இமய மலையின் சிகரத்திலே தெய்வத் தன்மை வாய்ந்த முனிவர் அறுவரும் உடம்படக் கற்பின் திறத்தால் நன்கு மதிக்கப்படும் கார்த்திகைய பெண்கள் அறுவரிடத்தே பெருவெள்ளமாக வந்த கங்கையைச் சடையிற் கரந்தோனும் நீலமணிபோலும் மிடற்றினையுடையவனுமாகிய இறைவனுக்கு மகனாகத் தோன்றியவனே இறைவனாகிய நீ களவொழுக்கம் ஒழுகி வள்ளி நாச்சியாரை மணந்தவன்று ஆயிரங்கண்ணோனாகிய இந்திரன் மகள் தெய்வ யானையின் கண்கள் மணிநிற மழையைப் பெய்தாற்போன்று முதுவேனிற்பருவம் கார்காலத்தின் தன்மையைப் பெற்றுப் பெருமழையைப் பெய்தாலொக்கப் பரங்குன்றின் கண்ணே நீராகிய தனிந்த மழையைப் பெய்தது.

முருகப் பெருமான் அவுனர்களை அழித்து இந்திரன் மகள் தெய்வயானையை மணந்து கொண்டபின்னரே குறவர் மகளாராகிய வள்ளி நாச்சியாரைக் களவொழுக்கம் ஒழுகி மணந்து கொண்டான் என்பது மேற்காட்டிய தொடரால் நன்கு விளங்கும். குறிஞ்சிக் கிழவனாகிய முருகன் குறவர் மகளாகிய வள்ளியை அன்பின் ஐந்தினைக் களவொழுக்க மாகிய தமிழியல் வழக்கப்படி மணந்து கொண்டான் என்பதும், இந்திரன் வேண்ட, அவன் மகள் தெய்வ யானையை மணந்து கொண்டது வேத நெறி பற்றிய பொதுமை சுட்டிய உலகியல் வழக்கே என்பதும் குன்றம் பூதனால் பாடிய இப்பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றன. அன்பின் ஐந்தினை ஒழுகலாற்றில் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளிற்கும் உரியராகிய வள்ளி நாச்சியார். தெய்வயானையார் ஆகிய தேவியர் இருவராலும் காதலிக்கப் படும் ஒரு தனித்தலைவன் முருகப் பெருமான் என்பதனை எடுத்துக் கூறி அம்முதல்வனால் களவொழுக்கம் ஒழுகி மணந்து கொள்ளப் பெற்ற வள்ளியின் சிறப்பும், அம்