பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கொள்ளுதலும், தலைவி அவ்வேண்டுகோளை ஏற்றலுமாகிய இவை உட்படத் தலைவனது புறத்தொழுக்கத்தால் வருவது. தலைவனால் நுகரப்பட்ட பரத்தை வீட்டின்கண்ணே நாட்காலையிலே ஆயமகள் ஒருத்திக்குச் செவ்வணியணிந்து துதாகவிட்டுத் தலைமகளது பூப்பு அறிவிப்ப, பண்புடைய அக்கழற்றுரையால் தலைவன் அங்கிருந்து மீண்டுவந்து உவக்கும் புணர்ச்சி உடையது. அப்புணர்ச்சிகள் தாம் தலைவியின் பக்கத்துள்ளார் கேட்டு வருந்த பரத்தையால் அவள் மனைக்கண் அலர் தூற்றப்படுவன. அப்புணர்ச்சி இன்பம் இயல்பாக அன்றி ஊடலால் உளதாவது. அதனால் இங்ங்ணம் கற்புமணம் பெற்ற மகளிர் தவைன் பிரிய அவனொடு ஊடல் கொண்டு வருந்துமாறு போல, கணவரை விட்டு நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியையுடைய மகளிர், தம் கணவரொடு மாறுகொண்டு ஊடும் குற்றமுடையர் அல்லர். இவ்வாறு காதலர் பிரிந்தறியாத இப்புணர்ச்சியை விரும்புகின்ற பொருளிலக்கணத்தையுடைய தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கத்தின் அன்பின் திறனை ஆராய்ந்துணராத தலைவர். இத்தகைய குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருளாகிய புணர்ச்சியின் பயனை உள்ளவாறு உணர்ந்து பயன்கொள்ளும் ஆற்றல் இல்லாதவராவார் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்,

காதலர் இருவர் கருத்துணராது பெற்றோர் முதலியோரால் நடத்தப்படும் கற்பு மணத்திற்கும், நல்லூழின் செயலால் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உலகத்தார் அறியாது தம்முள் தாமே கலந்த கேண்மையின ராய்க் களவொழுக்கம் ஒழுகிப் பின்னர் வரைந்து கொள்ளும் தமிழியல் வழக்கமாகிய களவு மனத்திற்கும் இடையே அமைந்த வேறுபாட்டினை முறையே தெய்வயானை அம்மையார், வள்ளி நாச்சியார் ஆகிய இருவருடைய செயல்களிலே வைத்துப் புலப்படுத்தும் முைைறயிலமைந்தன, 9ஆம் பரிபாடலில் 27 முதல் 69 முடியவுள்ள அடிகளாகும்.

கடிய சூர்மாவினைத் தடிந்த வேற்படையைத் தாங்கிய முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் கலைத்திறத்தில் வல்லார் பலரும் தம்முள் உறழ்ந்து தத்தம்