பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சிறந்து நின் திருவடி உறைதலாகிய இவ்வாழ்வு எமக்கு நாள்தோறும் பொலிந்து பயன்தந்து சிறப்பதாகுக! எனக் குன்றம்பூதனார் வேண்டிக் கொள்வதாகவமைந்தது,

"கற்பினை நெறியூ உற்பிணைக் கிழமை

நயத்தகு மரபின் வியத்தகு குமர வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத் தலை நினையா நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே"

(ມf. 9, 84–85)

எனவரும் பகுதியாகும். தலைவன் பிரிந்து சென்ற நிலையில் அவன் வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தைக் கண்டு வருந்திய தலைமகள் கேட்பத் தோழி முருக வேளைப் பரவுவாளாய்த் தலைமகன் இப்பருவத்தே வந்துசேர்வான் என்பது பட வற்புறுத்தும் முறையிலமைந்தது கேசவனார் பாடிய 14ஆம் பரிபாடல்ாகும். இப்பாடலின் முதலிலுள்ள 17 அடிகள் கார்ப்பருவத்தின் தோற்றத்தைச் சொல்லோவியஞ் செய்து காட்டுகின்றன. சூரபன்மாவைக் கிளையோடு அழித்த வேற்படையை உடையோனே! கார்காலத்து வெண்மேகம் கிளர்ந்து மேலெழுந்தாற் போன்ற நறிய அகில் முதலிய வற்றாற் புகைத்த நறும் புகையை மிகவிரும்பியவனே ஆறு முகங்களையும் பன்னிரு தோள்களையும் உடையையாய் அழகினாற் பிற மகளிரை வென்ற வெற்றியையுடைய வள்ளி நாச்சியாரது நலத்தை நயந்தவனே! தம்மைப் பிரிந்த கணவர் வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை இசைத்து நின்னைப்பாடுகின்ற தோத்திரப் பாடலை விரும்பியவனே! நீ பிறந்தருளியபொழுதே நின்னை நினைந்து உளம் நடுங்கி இந்திரன் முதலிய சிறப்புடைய தேவர்களும் அஞ்சுதற்குக் காரணமாகிய இறைமைத் தன்மையை உடையோனே! முந்நூல் அணிதற்கு முன் ஒரு பிறப்பும், அணிந்தபின் ஒரு பிறப்பும் என இரண்டு பிறப்பினையும் அப்பிறப்பினால் வந்த இரண்டு பெயர்களையும் அன்பென்னும் ஈரம் வாய்ந்த நெஞ்சினையும் ஒப்பில்லாத புகழினையும் உடைய அந்தணர்களது வைதிக அறத்தைப் பொருந்தியவனே மேற்கூறிய அத்தன்மையை ஆதலின்,