பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

337


மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்’ (151-154)

எனச் சிவபெருமானை நக்கீரர் போற்றிப் பரவியுள்ளார்.

“வெள்ளைநிறம் வாய்ந்த எருதினை எழுதிய கொடியினை வெற்றியுடன் உயர்த்தப் பலரும் புகழும் திணிந்த தோள்களையும் ஒருபாகத்தே உமையமர்ந்து விளங்கும் திருவுருவினையும் இதழ் குவியாத மூன்று கண்களையும் உடைய முப்புரங்களை யெரித்த வலிமை மிக்க செல்வனாகிய இறைவன்’ என்பது இத்தொடரின் பொருளாகும். இடபக்கொடி சிவபெருமானுக்குரிய கொடி யென்பதும் அம்முதல்வன் மூன்று கண்களையுடையவனாய் உமாதேவியாரை ஒருபாகத்திற்கொண்டவன் என்பதும் முப்புரங்களை அழித்தவன் என்பதும் மேற்காட்டிய தொடரிற் சுட்டப்பெற்றுள்ளமை காணலாம்.

நீண்டுயர்ந்த பெரிய இமயமலையின் உச்சியிலே நீலநிறத்தையுடைய தருப்பை வளர்ந்த சரவனப் பொய்கையிலே விசும்பும் வளியும் தீயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் தீ தன் அகங்கையிலே ஏற்ப முனிவர் எழுவர் மனைவியருள் அருந்ததி யொழிந்த ஏனைய அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வனே, கல்லாலின் கீழிருந்த கடவுளினுடைய புதல்வனே, பெருமையையுடைய மலையாகிய இமயமலையரையன் மகளாகிய உமையின் மகனே என முருகப் பெருமானைப் போற்றும் முறையில் அமைந்தது,

"நெடும் பெருஞ்சிமையத்துநீலப்பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கையேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழுகடவுட்புதல்வ மால்வரை மலைமகள் மகனே' (திருமுருகு. 253-257)

எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடராகும். இதன்கண் 'ஐவருள் ஒருவன்’ என்றது ஐம்பெரும்பூதங்களுள் ஒன்றாகிய தீக்கடவுளை, அவன் அங்கையேற்ப என்றது, சிவபெருமான் உமாதேவியுடன் கூடியிருந்த நிலையில் சிவபெருமானிடத்தி

சை. சி. சா. வ. 22