பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

389


ஈசன் ஒருவனே' (5-100-3) எனவரும் அப்பரடிகள் வாய்மொழியாகும். ஆறெலாங்கங்கையே யனைய குன்றெலாம், ஈறிலான் கயிலையே ஏய்ந்த (கம்பர்.பால.) எனவரும் பாடலிற் கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிவபெரு மானை “ஈறிலான்’ என்ற பெயராற் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும்.

சிவநெறிக்கொள்கைகள்

அம்மையப்பனாகத் திகழும் சிவபெருமான் மன்னுயிர்களின் பொருட்டு உலகங்களைத் தோற்றுவித்துக் குறித்தகாலம் வரை அவற்றை நிலைபெறச் செய்து ஊழிமுடிவில் மீட்டுத் தன்னிடத்து ஒடுங்கச் செய்கின்றான் என்பதும், ஊழிமுடிவில் உலகங்களை ஒடுக்கிய இறைவனே உயிர்களின் பொருட்டு உலகங்களை மீளவும் படைத்தருள் கின்றான் என்பதும் எனவே மகாசங்காரகாரனனாகிய சிவபெருமானே உலகத்திற்கு நிமித்தகாரனன் என்பதும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தின் பொருளை விளக்கு மிடத்து முன்னர் விளக்கப் பெற்றன. காணப்படும் உலக மாகிய காரியத்தைக் கொண்டு அதற்கு நிமித்த காரணமா யுள்ள முழுமுதற் பொருள் ஒன்று உண்டுஎனக் கருத லளவையால் கடவுளுண்மை துணியவேண்டுதலின் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், ஒருவன் இருதாள் தாள்நிழற்கீழ் மூவகையுலகழும் முறையே முகிழ்த்தன்' என உலகின் மேல் வைத்துக் கூறினார். ஆயினும் மூவகை யுலகங்களையும் தன்தாள் நிழற்கீழ்க் கொண்டு அவற்றை முறையே முகிழ்க்கும்படி (தோன்றும்படி) செய்தருளியவன் 'நீலமேனி வாலிழையாகத்து ஒருவன்' என்பது ஆசிரியர் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும். இத்தொடரில் ‘தாள்நிழல்' என்றது, இறைவன் திருவடி நீழற்கண் அடங்கிய தூய மாயையாகிய சட ஆற்றலையெனக் கொள்ளுதல் வேண்டும், கிழங்கினின்றும் முளைத்த தாமரையை அதற்கு ஆதாரமாகிய சேற்றினின்றும் முளைத்தது என்னும் பொருளில் பங்கயம் என வழங்கினாற் போல மாயையினின்றும் தோன்றிய உலகங்களை மாயைக்கு ஆதாரமாகிய திருவடி நீழலினின்றும் முகிழ்த்தன என்றார்