பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


களும் அவ்வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் சிவவழிபாடு தலைமையும் சிறப்பும் வாய்ந்ததாக அக்காலத்து வேந்தர்களாலும் குடிமக்களிற் பெரும்பான்மையாராலும் மேற்கொள்ளப்பெற்று வந்தமையும் தமிழகத்திற்குச் சிறப்புரிமை வாய்ந்த சைவசித்தாந்தத் தத்துவக்கொள்கைக்கு மூலமாகிய உண்மைகள் பல சங்க இலக்கியங்களில் வேரூன்றி யுள்ளமையும் ஒருவாறு புலனாதல் காணலாம்.