பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

449


துறப்போர் என முறையே உமாபதி சிவாசாரியார் குறித்துள்ளார். இதனால் உயிர்கள் எண்ணற்றன எனச் சைவசித்தாந்தம் கூறும் கொள்கை திருக்குறளில் முன்னமே இடம் பெற்றுள்ளமை காணலாம்.

ஐம்பொறிகளாகிய கருவிகளின் துணையின்றி உலகப்பெருள்கள் எதனையும் உணர முடியாத நிலையில் அறிவினாற் குறைபாடுடைமை உயிர்களது இயல்பாகும். உயிர்களின் அறிவு வளர்ச்சிக்குச் செவி முதலிய பொறிகள் இன்றியமையாதன என்பதும் அவற்றின் துணையின்றி எதனையும் உணரமுடியாத அறிவுக்குறைபாடுடையன ஆன்மாக்கள் என்பதும் கோளில் பொறியிற்குணமிலவே' எனவரும் திருக்குறள் தொடராற் குறிப்பால் உணர்த்தப் பெற்றன. இக்குறிப்பினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

“பொறியின்றி யொன்றும் புணராத புந்திக்

கறிவென்ற பேர்நன்றற” (திருவருட் 15)

எனவரும் திருவருட்பயனாகும். "செவி முதலிய கருவிகளின் துணையில்லாமல் யாதொரு பொருளையும் உணரமாட்டாத உயிர்களுக்கு நூல்வல்லோர் அறிவுடையன (சித்து) என்று இட்டு வழங்கும் பெயர் மிகவும் அழகிது என்பது இதன் பொருளாகும். 'அறிவு என்ற பேர் அறநன்று என்ற தொடர் இங்கு இகழ்ச்சிக் குறிப்பாய் நின்று உயிர்கள் அறிவினாற் குறைபாடுடையன என்பதனைப் புலப்படுத்தி நிற்றல் காண்க. இறைவன் தூய அறிவேயுருவாகத் திகழ்வோன் என்னும் உண்மையினை வாலறிவன்’ என்ற பெயராற் புலப்படுத்திய திருவள்ளுவர் அம்முதல்வனியல்புக்கு வேறான உயிர்த் தொகுதிகள் அறிவும் அறியாமையும் விரவப்பெற்றன என்னும் உண்மையினை,

"அறிதோ றறியாமை கண்டற்றால்காமஞ்

செறிதோறுஞ்சேயிழை மாட்டு” (திருக். 1110)

எனவரும் திருக்குறளில் உவமை வாயிலாகப் புலப்படுத்து கின்றார். அன்புடைய காதலியைப் பெற்றோர் அறியாதவாறு

சை, சி. சா. வ. 29