பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உடன்போக்கில் அழைத்துக்கொண்டு செல்லும் தலைவன், தலைவியொடு கூடிச் செல்லுதலால் தனக்கு மேன்மேலும் உளவாம் இன்பமிகுதியினைத் தனக்குள்ளே சொல்லிக் கொள்வதாக அமைந்தது மேற்குறித்த திருக்குறட் பாடலாகும். 'நூல்களாலும் நுண்ணுணர்வாலும் பொருள் களை ஆராய்ந்து அறியுந்தோறும் அதுவரை அவ்வுண்மை யினை யறிந்து கொள்ளாத தனது அறியாமை புலப்படுமாறு போல், செவ்விய அணிகலன்களையுடையளாய இவளை இடை விடாது செறியுந்தோறும் இவள்மாட்டு முன்னர் அறியப் படாத காதலின்பம் காணப்படாநின்றது” என்பது இதன் பொருளாகும். "அறிவிற்கு எல்லையின்மையால் மேன்மேல் அறிய அறிய முன்னைய அறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவுக்கு எல்லையின்றி மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு கெறியாமையினாய் முடியா நின்றது எனத் தலைவன்) தன் ஆற்றாமை கூறியவாறு" என இக்குறட் பாவுக்கு விளக்கம் தருவர் பரிமேலழகர். இவ்விளக்கம் மாந்தர் பொருள்களை அறியுந் தோறும் பெறும் அறிவு தாம் அதற்குமுன் அப்பொருள் களைப் பற்றி அறிந்திருந்த அறிவினைக் குறைபாடுடையதாகக் காட்டுதலால் உயிர்களது அறிவு குறைபாடுடையது என்னும் உண்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

பாசப்பிணிப்புடைய ஆன்மாக்கள் முற்றுனர்

வுடைய இறைவனைப் போன்று எல்லாம் அறிந்தனவு மாகாமல் உலகத்தொகுதியாகிய உணர்வில்லாத கடப் பொருள்கள் போன்று ஒன்றும் அறியாதனவும் ஆகாமல் உணர்வுடைய பொருளைச் சார்ந்த நிலையில் உணர்வு விளக்கம் பெறுவனவும் உணர்வில்லாத பொருள்களைச் சார்ந்த நிலையில் உணர்வு விளக்கம் பெறாதனவாகவும் ஆக அவ்விருதிறப்பொருள்களிலும் தோய்ந்து சார்ந்ததன் வண்ணமாய் நின்றுனருந்தன்மையனவாகும் என்பது சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் ஆன்ம விலக்கணமாகும். ஆன்மாவின் உண்மையியல்பாகிய சிறப்பிலக்கணம் குறித்த இம்முடிவிற்கு ஆதாரமாக அமைந்தது.

"நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்

கிணத்தியல்பதாகும் அறிவு (திருக், 452)