பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

451


என வரும் திருக்குறளாகும். "நீரானது தான் சார்ந்த நிலத்தினது இயல்பினாலே தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மையினைப் பெறுவதாகும். அதுபோல மாந்தர து அறிவும் தான் சேர்ந்த இனத்தினது இயல்பினாலே தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மையினைப்பெறும்” என்பது இதன் பொருள். இதன்கண் மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பது ஆகும் எனக்குறித்த பொதுவகை முடியிலிருந்து உய்த்துணர்ந்து கொள்ளப்பெற்றது உயிர்கள் யாவும் சார்ந்ததன் வண்ணமாந்தன்மையன என்னும் இச்சிறப்பு வகை முடிபாகும். ஆகவே உயிர்கள் முற்றுனர் வுடைய இறைவனைப் போன்று தாமே எல்லாம்அறிந்தனவும் ஆகாமல், உலகத்திலுள்ள அறிவில்லாத பொருள்களைப் போன்று ஒன்றும் அறியவியலாதனவுமாகாமல், அறிவுடைய பரம்பொருளைச் சார்ந்த வழி அறிவுடையனவர்கவும், அறிவில்லாத சடப்பொருள்களைச் சார்ந்த வழி அறிவில்லாதனவாகவும் அதுவது வாய்ச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையெனச் சைவசித்தாந்தம் கூறும் ஆன்ம விலக்கணம் பற்றிய முடிவுக்கு மேற்காட்டிய திருக்குறள் ஆதாரமாயமைந்து அரண்செய்தல் இங்கு மனங்கொளத் தகுவதாகும்.

காணப்படும் உலகம் உள்ளபொருளாய்ப் பல்வேறு நுண்பொருள்களால் தத்துவங்களால் இயன்றது என்பது சாங்கியம் முதலிய தத்துவ நூலார் கண்டுணர்த்திய உண்மை முடிபாகும். உலகம் உள்பொருள் என்னும் இம்முடிவு தொல்காப்பியம் முதலிய தமிழ்த்தொன்னூல்களிலேயே இடம் பெற்ற தொன்மையுடையதாகும். உலகம் உள் பொருள் என்பது முப்பொருளுண்மை கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைக்கு ஏற்புடையதேயாகும். உலகினைப் பருப்பொருள்களாகப் பகுத்து ஆராயுமிடத்து நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனப்படும் ஐவகைப் பொருளின் திரட்சியே இவ்வுலகம் என்னும் உண்மை எளிதிற் புலனாகும். பருப்பொருள்களாகத் தோன்றும் நிலமுதலிய ஐம்பெரும்

பூதங்களுக்கும் முதற்காரணமாய் நுண்ணிய நிலையில்

உள்ளவை முறையே நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் ஐந்துமாகும். ஐம்பெரும் பூதங்களுக்கு முதலாக