பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

39


மாயிருள் நீங்கத் தோன்றும் பலர்புகழ் செஞ்ஞாயிறே மைவரையுலகின் தெய்வமாகிய சேயோன கவும் கதிரவனுக்குக் கீழே என்றும் நீலநிறக் கடலே சேயோனது ஊர்தியாகிய மயிலாகவும் கருதிக் காலைக் கதிரவனைச் சேயோனாக எண்ணிப் போற்றுதல் தமிழ் ஞாலத்தவர் மரபாயிற்று. சேயோனாகிய முருகப் பெருமான் வைகறைப் பொழுதிலே மாயிருள் நீங்கத் தோன்றும் இளஞாயிற்றின் தோற்றமுடையவனாகத் திருமுருகாற்றுப்படையிற் போற்றப் பெற்றுள்ளமை அம்முதல்வன் என்றும் இளையோனாக உலக வாழ்க்கையிலீடுபடும் மக்கட் குலத்தார்க்கு மெய்யுணர்வென்னும் வேற்படையினால் அச்சமகற்றி அறிவும் ஆண்மையும் நல்கி அவர் தம் வாழ்வில் முன்னியது முடித்தருளும் பெற்றியனாகப் போற்றப்பெறும் செந்தமிழ்க் கடவுளாகத் திகழ்கின்றான்.

இனி, கதிர் சாயும் காலமாகிய மாலை வேளையில் மேற்கே காணப்படும் கதிரவனே தன் செவ்வொளி தோய்ந்த முகிற்குழாங்கள் வானமுகட்டின் நாற்புறத்தும் செக்கர்ச் சடையெனச் சிவந்துமிளிர அம் முகிற் குழாங்களின் இடையே தோன்றும் வெண்பிறையானது அவிர் சடைக்கற்றைமேல் நிவந்து தோன்றும் வெண்பிறையென விளங்கா நிற்கச் சிவனெனும் நா மந் தனக்கேயுடைய செம்மேனியம்மானை மனங்கொள்ளச் செய்யும் தெய்வத் தோற்றமுடையனாகத் திகழ்தலின் சிவநெறிச் செல்வர் களால் சிவன் எனவே வைத்து வழிபடப் பெறுவானாயினன். இவ்வுண்மை,

“அருக்கன்பா தம் வணங்குவர் அந்தியில்

அருக்கனாவான் அரனுருவல்லனோ”

எனவரும் அப்பர் அருள்மொழியினால் நன்கு புலனாதல் கானலாம்.

காலையில் தோன்றும் இளஞாயிறு, இருளிற் றுயிலும் மன்னுயிர்களைத் தன் ஒளிக்கதிர்களால் இருள் நீக்கி

38. திருநாவுக்கரசர், தேவாரம்