பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

43


சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும் 43

சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் இவ்வழிபாடுகளும் இவற்றின் வேறாகச் சமனமும் புத்தமும் வேதநெறிபற்றிய கொள்கைகளும் தத்துவ அளவில் தனித் தனிச் சமயங்களாக வேறுபடுத்துப் பேசப்படுகின்றன. சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் நான்கும் தம்முள் உறவுமுறைத் தொடர்புடையன வாகவும் இவற்றுட் சிவவழிபாடொன்றுமே தலைமைச் சிறப்புடையதாகவும் திகழ்ந்தமை இவையன்றி ஞாயிற்று வழிபாடு, திங்கள் வழிபாடு, மழை வழிபாடு, இந்திரவிழா, காமவேள்விழா என்பன அக்காலத் தமிழ் மக்களால் கொண்டாடப் பெற்றன என்பதும் தெய்வச் சிறப்புடைய ஊரைப் போற்றுதலும் தீதுநீர் வையை கங்கை ஆறாட்டும் கடலாட்டும் ஆகிய வழிபாட்டுச் சடங்குகளும் அக்கால மக்களால் மேற்கொள்ளப்பெற்றன என்பதும் சங்கத் தொகை நூல்களாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இவ்விருகாப்பியங்களாலும் நன்குனரப்படும்.

வடநாட்டில் வைதிக நெறிக்கு எதிராகத் தோன்றிய சமனபுத்த சமயங்கள், தத்தம் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் தமிழகத்தில் சங்ககாலத்தில் வேரூன்றின. வேரூன்றிய பின்னர்த் தம் சமயக் கொள்கையைப் பரப்பும் அளவில் அமைந்துவிடாது, இங்குள்ள தெய்வங் கொள்கையினையும் புறம்பழிக்கத் தொடங்கின என்பது, சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கூற்றைப் புறக்கணித்துப் பேசிய கவுந்தியடிகள் கூற்றால் உய்த்துணரப்படும். சிலப்பதிகாரத்தையடுத்து மணிமேகலைக் காப்பியம் இயற்றப் பெற்ற காலத்தில், தமிழகத்திற் பல்வேறு சமயவாதிகளும் மக்கள் பேரவையிலே தத்தம் சமய வுண்மைகளைக் குறித்து உறழ்ந்து பேசுதற்கேற்ற வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினம் முதலிய தமிழகப் பேரூர்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழாக்காலங்களில் நாடாள் வேந்தரால் அளிக்கப்பெற்றதென்பது,