பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு வருவதாகும். இச்செய்தி,

& 4

அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும், ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும் இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன கடுமனோங்கிய நெடுநிலைக்கோட்டமும்”

எனவரும் தொடரால் அறியப்படும்.

இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்த துறவிகள் இறந்தால் வீடுபேற்றுக்குரியராகிய அவர்களை உலகமக்கள் தொழுது போற்றுதலும், உலகப்பற்றுடைய பிறர் இறந்தால் அவர்களது பிரிவால் சுற்றத்தார் முதலியோர் அழுது அரற்றுதலும் இயல்பு. இவ்வியல்பினை,

"துறவோர் இறந்த தொழுவிளிப்பூசலும்

பிறவோர் இறந்த அழுவிளிப்பூசலும்” (6.72-73)

என்ற தொடராற் சாத்தனார் குறிப்பிடுதலால், இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்த துறவிகள் எந்தச் சமயத்தவராயினும் அவர்களைத் தெய்வமாக எண்ணி வழிபட்டுப் போற்றுதல் தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் சமய ஒழுகலாறாகும் என்பது நன்கு புலனாகின்றது.