பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நாதனையர்ச்சித்து وتromلتgra நானும் இருந்தேன் நற்போதியின் கீழே (திருமந் 82)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். இப்பாடலில் நந்திநகர்' என்றது திருஆவடு துறையினை.

சிவயோகத்தமர்ந்த திருமூலர் இறைவன் திருவருளை இடைவிடாது சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய ஆகமத்தை அருளிச் செய்தார் என்பதும் இவ்வருள் நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருமந்திமாலை என்பதும்,

"நந்தியிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்திமதிபுனை அரனடிநாள்தொறும் சிந்தை செய்தாகமஞ் செப்பலுற்றேனே" (திருமந்,73)

எனவும்,

“பிறப்பிலிநாதனைப்பேர்நந்திதன்னைச் சிறப்பொடுவானவர் சென்றுகைகூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை, உறைப்பொடுங்கூடிநின்றோதலுமாமே" (திருமந். 86)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.

சிவயோகியாராகிய திருமூலர் தமிழாகமமாகிய திருமந்திர மாலையை அருளிச் செய்த காலத்தில் தமிழ் மொழியிற் சைவசமய நுண்பொருள்களை விரித்துரைக்கும் சாத்திரநூல்கள் சிலவாக அருகிக் காணப்பட்டன. எனினும் அத்தமிழ் நூல்களில் இல்லாத பொருள்கள் வேறெம் மொழிகளிலும் இல்லையென்று சொல்லும்படி உலகமக்கள் அனைவரும் உணர்ந்து உய்திபெறுதற்குரிய அரும் பொருள்கள் அனைத்தும் அத்தமிழ் நூல்களில் நிரம்பி யிருந்தன. இவ்வுண்மையினை,

"அங்கி மிகாமை வைத்தான் உடல்வைத்தான்

எங்கு மிகாமை வைத்தான் உலகேழையும்