பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

597


முறைகளும், மேற்குறித்த நெறிகளில் நிலைபெற்றொழுகி னோர் பெறுதற்குரிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நால்வகைப் பேறுகளும், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்னும் நால்வகைச் சத்தி நிபாதப் பக்குவ நிலைகளும் அறிவுறுத்தப்பெற்றுள்ளன. புறச்சமயங் களின் ஒவ்வாத்தன்மைகளைப் புலப்படுத்துவது புறச்சமய துடனம் என்ற பகுதியாகும். இத்தந்திரத்தில் திருமூலர் கூறியுள்ள பொருட்பகுதிகளை அடியொற்றியே அருணந்தி சிவாசாரியாக தாம் இயற்றிய சிவஞானசித்தியாரில் சரியை முதலிய நால்வகை நன்னெறிகளையும் இந்நான்கும் ஒவ்வொன்றும் நந்நான்காய் விரியும் முறைமையினையும் பிறவற்றையும் பிரித்துக் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுனரத்தக்கதாகும்.

பதி பசு பாசம் (கடவுள், உயிர், உலகம்) என்னும் முப்பொருள்களும் என்றும் உள்ளனவாகும். அவற்றுள் பதிஇறைவன், இறைவன் ஒருவனே, பசு - உயிர். உயிர்கள் எண்ணில்லாதன. அவை அநாதியே (தோற்றமில் கால மாகவே) மலத்தாற் பிணிக்கப்பட்டுள்ளன; அருளாள னாகிய இறைவன் உயிர்கள் இருள் மலப்பிணிப்பினின்றும் விடுபட்டு உய்யும் பொருட்டு உடல் கருவி உலகு நுகர்பொருள்களைத் தந்து அவற்றின் வழி நன்றும் தீதும் ஆகிய இருவினைகட் டோகிய பிறவிகளில் உயிர்களைச் செலுத்துகின்றான். உயிர்கள் பல்வகைப் பிறவிகளிலும் வந்து பிறந்து நல்வினை தீவினைகளைச் செய்து உழல்கின்றன. இவ்வாறு வினை வயத்தால் மாறிமாறிப் பிறந்திறந்துவரும் உயிர்கள் பிறவித் துன்பங்களினின்றும் நீங்கி என்றும் பேராவியற்கையாகிய நிலையான பேரின்பத்துள் இருக்க முயல்வதுவே நல்லுணர்வு பெற்ற உயிர்களின் குறிக்கோள்ாக அமைதல் வேண்டும். அத்தகைய நன்முயற்சிகளையும் நற்பணிகளையும் மேற் கொள்ளுதற்குக் குருவின் அருளும் திருவைந்தெழுத்து திருநீறு முதலிய சிவசாதனங்களுமே துணையாவன. அத்தகைய துணையினைக் கொண்டு சிவநெறியில் ஒழுகினால் உலகமக்கள் பிறவித்துன்பம் நீங்கி நிலையான பேரின்பத்தைப் பெறலாம். அவ்வருளனுபவம் மாறாதிருக்க