பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தத்துவ நூல்கள் தோன்றி வழங்கினமை நன்கு புலனாம். இச் சொல்லுக்குப் பொருள் விளக்கம் கூறுமுகமாகச் சைவ சமயங்கூறும் அத்துவிதமுத்தியின் இயல்பினை விளக்குவது,

“சைவஞ்சிவனுடன் சம்பந்தமாவது

சைவந்தனையறிந்தே சிவஞ்சாருதல் சைவஞ் சிவமன்றிச் சாராமல் நீவுதல் சைவஞ்சிவானந்தஞ் சாயுச்சியமே (திருமந். 1512)

எனவரும் திருமந்திரமாகும்.

“சைவமாவது உலகுயிர்களுடன் ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் சம்பந்தத்தினையுடையது. சைவமாவது ஆன்மா தன்னைச் சிவத்துக்கு அடிமையென்றுணர்ந்து சிவத்தினை வழிபட்டுச் சாருதல். சைவமாவது, சித்தாகிய பரம்பொருளன்றி அசித்தாகிய பாசங்கள் தன்னைச் சாராதவாறு நீங்கியொழுகுதல். சைவமாவது சிவத்துடன் இரண்டறக்கலந்து அம்முதல்வன் வழங்கும் சிவானந்தமாகிய பேரின் பத்தினைத் துய்த்து மகிழ்தலாகிய சாயுச்சிய நிலையாகும்” என்பது இத்திருப்பாடலின் பொருளாகும்.

சிவமாகிய முழுமுதற்பொருளோடு உலகுயிர்களுக்கு உளதாகிய தொடர்பினை விளக்கும் சமயநெறியே சைவம் என்பது உணர்த்துவார். சைவம் சிவத்தோடு சம்பந்தம் ஆவது என்றார். சிவமயம் என்பது இத்தொடர்பினையே குறிப்பதாகும். சார்ந்ததன் வண்ணமாம் தன்மையதாய ஆன்மா சதசத்தாகிய தன்னியல்பினையறிந்து அசத்தாகிய பாசங்களைச் சாராது சத்தாகிய சிவத்தினைச் சார்ந்து உய்திபெற வகுத்த நெறியே சைவம் என்பது அறிவுறுத்துவார் சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்’ என்றார். பாச நீக்கமும் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களுள், உயிர்க்குயிராய் உள்நின்று உதவி வரும் இறைவனருளால் அல்லது தான் ஒன்றையுஞ் செய்யாமையாகிய இறை பணியினால் பா சநீக்கம் உண்டாகும் என்பார் சைவம் சிவமன்றிச் சாராமல் நீவுதல்' នាងម៉េ្លះ நீவுதல் - நீங்குதல். ஒரு பொருளைக் காட்டக் கானுந்தனமையதாய கண்ணுக்கு ஒன்றைக் கானும்படி