பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பால்பிரிந்திசையா புயர்திணை மேன”

எனவரும் சூத்திரமாகும். "காலமும் உலகப்பகுதியும் உயிரும் உடம்பும் பால்வரை தெய்வமும் வினையும் பூதமும் ஞாயிறும் திங்களும் சொல்லும் என எண்ணப்பெற்ற இப் பத் துடனே இவைபோன்ற பொருள்களிற் பயின்று வருவன பிறவும் ஆகிய சொற்களெல்லாம் ஐம்பாலுள் இன்னபால் எனப் பிரிந்து இசைப்பன அல்ல, பொதுவாக உயர்திணைப் பொருள்மேல் நிகழ்வனவாம்” என்பது இந்நூற்பாவின் பொருளாகும்.

“இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தனவெல்லாம் தெய்வத்தையே உணர்த்தின வாதலின் தெய்வம் என்பதனைத் தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக்கிளவியும் (தொல்-கிளவி-4) என்பதனான் உயர் தினையென்பது பெற்றாம். இவையெல்லாந் தெய்வ மென்னும் உயர்தினைப் பொருளையுணர்த்தினவேனுந் தெய்வம் என்னுஞ் சொல் அஃறினை வாசகமாதலின் அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளுமென்றார். இச் சொற்கள் கூறுகின்ற பொழுதே தத்தம் உயர் தினைப்பபாற் பொருளே தோற்றுவித்து நிற்றலின் ஆகுபெயரன்மை யுணர்க. காலம் என்றது காலக்கடவுளை. உலகம் என்றது உலகத்தாரை. அறஞ்செய்து துறக்கம் புக்கான், உயிர்நீத்து. ஒரு மகன் கிடந்தான் என உயிரும் உடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கோடலின் மக்களேயாயின. இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின் பால்வரை தெய்வமென்றார். வினை இருவினைத் தெய்வம். சொல்நாமகளாகிய தெய்வம்” என நச்சினார்க்கினியர் இச் சூத்திரப் பொருளை விளக்கியுள்ளார். 'வினை என்பது அறத்தெய்வம்’ என்பர் சேனாவரையர்.

“காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ; ; ; ; ; ; ; உள்ளதோர் பொருள். உலகம் என்பது கீழும் நடுவுமாகி எல்லாவுயிருந் தோற்றுதற்கு இடம: . பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி

5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 58,