பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

643


மில்லாதான்; அராக முதலிய குணங்கள் சேரப்பெறாதான்; ஒன்றிலும் இச்சையில்லாதான்; தோற்றக்கேடுகள் இல்லாமையால் என்றும் நிலைத்துள்ளவன்; கலைமுதலிய தத்துவங்களோடு கூடாப்பெறாதான்; தனக்கென்று பொருந்திய செயல் எதுவும் இல்லாதான்; எனவே திண்மை யுடைய வினைமுதலாந் தன்மையில்லாதான்; வஞ்சனையைச் செய்யும் ஆணவமலத்தோடு கூடியவன்; வியாபகத் தன்மைய னாயினும் மலவிருளில் அழுந்தியுள்ளான்” என்பது இத் திருமந்திரத்தின் பொருளாகும்.

இங்குக் குறி என்றது, முதனிலைத் தொழிற்பெயராய் இச்சையை உணர்த்தியது. அராகாதிகுணம் என்றது, தருமம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநை சுவரியம் என்னும் புத்திகுனம் எட்டினையும். அராகாதிகுணங்கள் இல்லான் இனம் பற்றி ஏனைய போது கர்ச்சிக்குரிய கருவிகளும் இல்லாதவன் என்பதும் கொள்ளப்படும்.

உயிரானது இருள்மலத்தினால் மறைக்கப்பட்டு எத்தகைய கருவிகளும் பெறாமல் ஒருசெயலுமின்றிக் கிடந்த கேவலாவத்தையின் இயல்பினை விளக்கும் இத்திருமந்திரப் பொருளை கூர்ந்துணர்ந்த அருனந்தி சிவாசாரியர், இத்திருப்பாடற்கு உரை விளக்கம் தரும் முறையில்,

"அறிவிலன் அமூர்த்தன்நித்தன் அராகாதி குணங்களோடுஞ் செறிவிலன் கலாதியோடுஞ் சேர்விலன் செயல்கள் இல்லான் குறியிலன் கருத்தாவல்லன் போகத்திற் கொள்கையில்லான் பிரிவிலன் மலத்தினோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா”

(சித்தியார் சுபக். 288)

எனக் கேவலநிலையின் இயல்பினை விரித்துரைத்துரைத்தார்.

ஆன்மா உடம்பு முன் இல்லாதவன் கலை முதலிய தத்துவங்களோடு முன் சேராதவன்; புத்திகுனம் எட்டினை யும் முன்பொருந்தாதவன்; எதிலும். இச்சை இல்லாதவன்; அறிவுமுன் இல்லாதவன்; ஒரு தொழிலும் முன் இல்லாதவன்; தனக்கென முன் ஒரு சுதந்தரம் இல்லாதவன் போகத்தில்