பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

671


புணர்ந்திருப்பவனும் அவனே. அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றுள் ஒன்றினுந்தோயாது பிரிந்திருப்பவனும் அவனே. பூங்கொத்தினைப் போன்று எப்பொருள்களும் தன்கண் பூத்து விளங்குதற்கு ஆதாரமாயுள்ள அம்முதல்வன் தன்னை உயிர்கள் சிந்தித்துணர்தற்கு இயலாதவாறு அப்பாற் பட்டுள்ளான். (ஆயினும்) கொத்தாய் மலர்ந்த பூக்களிடத்தே உள்ளிருந்து தோன்றும் நறுமணத்தினைப்போன்று எவ்வுயிர்க்கும் உள்ளிருந்து தோன்றும் சிறப்பினை யுடையனாய் மாறாது நிலைபெற்றுள்ளான்” என்பது இதன் பொருளாகும்.

“கந்தழியாவது ஒருபற்றும் அற்று அருவாய்த்தானே நிற்கும் தத்துவங்கடந்த பொருள். ......... இதனை "உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதருநாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' (திருவாசகம்) என அதனை உணர்ந்தோர் கூறியவாற்றான் உணர்க” (திருமுருகு......... நச். உரை) என்பர் நச்சினார்க்கினியர். இக்கருத்து துனரின் மலர்க்கந்தம் துன்னநின்றானே’ எனவரும் இத்திருமந்திரத்தில் வேரூன்றியுள்ளமை காணலாம். இனர், துனர் - பூங்கொத்து. கந்தம் - மனம். துன்னுதல் - பிரிவின்றிச் சேர்தல்.

பொருள்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவுடைய ஆன்மாவின் உறையுளாகிய உடம்பின்கண்னே உயிர்க்கு நற்பயன் விளைக்கும் அறிகருவிகளாகிய ஐம்பொறிகள் உள்ளன. அவை ஐந்தும் தம்மை நல்வழியிற் செலுத்தும் ஆசிரியனைப் பெறாமையால் வேபோதமாகிய வெறி கொண்டு புலன்களின் வழியே உழல்கின்றன. அவை தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தவல்ல ஆசிரியனைப் பெற்று அவனது உபதேசத்தின்வழி தற்போதம் அடங்கப்பெறின், அவை ஐந்தும் சிவஞானமாகிய பாலினை உயிர்க்கு நிரம்பத் தருவன என்னும் அரியவுண்மையினை விளக்கும் விடுகதை போன்று அமைந்தது,

“பார்ப்பான் அகத்திலே பாற்பாக ஐந்துண்டு

மேய்ப்பாரை யின்றிவெறித்துத் திரிவன