பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அவற்றோடுகூடி அவத்தையுறுவதாகிய புருடன் ஒன்றும், அங்ங்ணம் ஆன்மா ஐவகை உணர்வுநிலைகளை அடைதற் குரிய வன்மைக்கு ஏதுவாய், அகங்காரத்தாற் செலுத்தப்படும் பிராணன் முதலிய வாயுக்கள் பத்தும் என இவை.

உயிரானது மேற்குறித்த உணர்வு நிலைகளாகிய காரிய அவத்தைகளை அடைதற்குக் காரணமாக உள்ளவை கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்று நிலைகளாகும். இம்மூன்றையும், காரணாவத்தை என வழங்குதல் மரபு. இவற்றுள் கேவலம்’ என்பது உயிர் தனக்குரிய விழைவு, அறிவு, செயல் என்பவற்றின் நிகழ்ச்சி சிறிதும் இன்றி, மாயேயமாகிய கருவிகளைப் பெறாது தனித்துத் தன்னளவில் நிற்கும் நிலையாகும். சகலம்’ என்பது ஆன்மா உடல் கருவிகள் முதலியவற்றோடுங் கூடி விழைவு அறிவு செயல் ஆகிய அவை ஒருசிறிது விளங்க நிற்கும் நிலை. சுத்தம்’ என்பது ஆன்மா தன்னைப் பற்றிய ஐவகை மலங்களும் நீங்கி, சிவத்தோடு கூடி விழைவு அறிவு செயல்கள் எங்குமாய்ப் பரவி விளங்கும் நிலையாகும். இம்மூவகை நிலைகளையும் விளக்கும் முறையில் அமைந்தது.

“கேவல சகல சுத்தம் என்று மூன்றவத்தை ஆன்மா

மேவுவன், கேவலம் தன்னுண்மை, மெய்

பொறிகளெல்லாம் காவலன் கொடுத்தபோது சகலனாம், மலங்களெல்லாம் ஒவினபோது சுத்தம் உடையன் உற்பவந்துடைத்தே”

(227)

என வரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். காரணாவத்தைகளாகிய இம்மூன்றையும் இவற்றின் காரியங்களாகிய அவத்தை வகைகளையும் திருமந்திரம் எட்டாந் தந்திரத்தில் கேவல சகல சுத்தம்’ என்ற தலைப்பில் திருமூலர் வகுத்தும் விரித்தும் விளக்கியுள்ளமை ஆராய்ந்து உணரத் தகுவதாகும்.

ஆணவமலம் ஒன்றேயுடைய உயிர்களை விஞ்ஞான கலர் எனவும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய உயிர்களைப் பிரளயாகலர் எனவும், ஆணவம் கன்மம் மாயை