பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மக்கள் வாழ்விலே குழப்பம் விளைவித்த நிலையில் சைவ சமய அருளாசிரியர்கள் அறிவுறுத்திய சமய ஒருமைப் பாட்டுனர்வினை மீண்டும் வலியுறுத்தும் நிலையில் அமைந்தது,

"சென்றநெறியெல்லாம் செந்நெறியாம்படி

நின்ற பரிசறிந்துந்தீபற நீசெயல் செய்யாதேயுந்தீபற” (37)

எனவரும் திருவுந்தியாராகும்.

இது தன்முனைப்பின்றித் திருவருள் வழி யொழுகினால் எல்லாநெறிகளும் நன்னெறியேயாகும் என வற்புறுத்துகின்றது. “உலக மக்கள் தத்தம் வினைக்கு ஈடாகச் சென்ற வழிகள் எல்லாம் செவ்விய நன்னெறிகளாக அமையும்படி உயிர்களின் உள்ளும்புறம்பும் இறைவன் உறுதுணையாய் நின்று அருள்புரியும் திருவருளின் திறத்தினை அறிந்து தெளிவாயாக. நீயாக எந்தச் செயலையும் தன்முனைப்பினாற் செய்தலைத் தவிர்வாயாக’ என்பது இதன் பொருளாகும். இத்திருவுந்தியாரில் நெறி' என்றது உலக மக்கள் மேற்கொண்ட சமயநெறிகளைச் சென்ற நெறி யெல்லாம் செந்நெறியாம் படி நின்ற பரிசு என்றது மக்கள் கடைப்பிடித்தொழுகுகின்ற எல்லாச் சமயநெறிகளும் ஏணிப்படிகளாக அமைய இவையனைத்தும் முடிவில் தன்கண் வந்து சேரும்படி எல்லோரையும் செந்நெறியாகிய சிவநெறிக்கேயுரியராகத் திருத்திப் பனிகொண்டு அருள் புரியவல்ல இறைவன் தானொருவனே யென்னும்படி எச்சமயத்தார்க்கும் எவ்வுயிர்க்கும் ஒப்ப அருள்கூர்ந்து நிற்கும் இறைவனது பொதுமை நிலையினை,

"ஆறு சமயத்தவரவரைத் தேற்றுந்தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந்தகையன இன்னம்பரான்றன் இணையடியே’

(4-100-7) எனவரும் அப்பர் அருண்மொழி இறைவனது இப்பொதுமை நிலையினை நன்கு புலப்படுத்தல் காணலாம். 'நீ செயல் செய்யாதே' என்றது, ‘இறைவனது திருக்குறிப்புக்குமாறாக