பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

743



"பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி"

எனவரும் ஆளுடைய பிள்ளையார் வாய்மொழியாலும்,

“வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத்திற்றி”

எனவரும் நம்பியாரூரர் வாய்மொழியாலும் நன்கு விளங்கும்.

கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் என்றும் உள்ள பொருள்கள் எனவும், அம்மூன்றனுட் கடவுள் என்பது நிலைமாறாத முற்றறிவுடைய பொருள் எனவும், உயிர்கள் அறிவிக்க அறியும் தன்மையையுடையன எனவும், உலகம் ஒருநிலையில் நில்லாது மாறுதலடையும் உள்பொருள் எனவும் சைவ சித்தாந்த்ம் கூறும். இத்தகைய முப்பொரு ளுண்மை,

“கற்றுக்கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடையானுளன் நாமுளோம் எற்றுக்கோ நமனார் முனிவுண்பதே"

என்ற திருக்குறுந்தொகையில் தெளிவாக உணர்த்தப்பட்டது. இறைவனுக்குத் தொண்டுபட்ட உயிர்களாகிய நாம் நமனால் முனியப்படும் எளிமையுடையோம் அல்லோம் என்பார் இதன் முதலிரண்டடிகளாலும் உலகின் உண்மை கூறி, மூன்றாமடியில் கடவுள், உயிர் என்னும் இவ்விரண்டின் உண்மையினை உணர்த்தியருள்கின்றார் திருநாவுக்கரசர். 'கற்றைச் செஞ்சடையான் உளன்’ என்பதனை அடுத்துப் பல்லுயிர்களையும் தம்மோடு உளப்படுத்தி நாம் உளோம்’ என்றது, ஞானமேயுருவாகிய அவ்விறைவனது சார்பினால் அவனுக்கு அடிமையாகிய நாமும் பொன்றாத பேரின்ப நிலையைப் பெறுதற்கு உரியராய் உள்ளோம் என அறிவுறுத்தியவாறாகும்.

மேற்குறித்த முப்பொருள்களுள் உயிரின் இலக்கணத்தைக் கூறவந்த திருநாவுக்கரசர், શ્ન જ જ இருளால் மறைப்புண்டு அல்லற்படும் அவ்வுயிர்களைத் தன்னருளாகிய கைகொடுத்து ஏற்றி உய்வித்தருளும்