பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மேற்கூறப்பட்ட தத்துவம் முப்பத்தாறும் தாத்து விகங்கள் அறுபதும் ஆகத் தொண்ணுற்றாறும் அண்டத்தி லுள்ளவாறேயமைந்த பிண்டமாகிய உடம்பின்கண் விரவியுள்ளன என்பதும் இவை உடம்பினுள்வாழும் உயிர்க்கு உதவியாய் நிற்றலேயன்றி இடர்செய்தலும் உண்டென்பதும் உடல் சிதைந்தால் இவையனைத்தும் உடம்பினைவிட்டு ஒடுவன என்பதும்,

"முப்பதும் முப்பதும் முப்புத்தறுவரும்

செப்பமதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்பமதிளுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தார்களே”

(திருமந்திரம் 154)

எனவரும் திருமந்திரத்தாற்புலனாம். இதன்கண் முப்பதும் முப்பதும் எனமுதற்கண் கூறப்பட்ட அறுபதும் தத்துவங் களின் காரியமாகிய தாத்துவிகங்களைக் குறித்தன. முப்பத்தறுவர் என்றது முப்பத்தாறு தத்துவங்களைக் குறித்தது. செப்பமதிளுடைக் கோயில்’ என்றது மக்கள் யாக்கையினை 'உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்' (திருமந்திரம்) என்பராதலின் உடம்பினைக் கோயில் என்றார்.

மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களும் அறுபது தாத்துவிகங்களும் ஆகத் தொண்ணுற்றாறும் கூடி உடம்புளே ஆட்சி செலுத்த அவற்றிடையே அகப்பட்டுத் தாம் வருந்தும் திறத்தினை,

'முப்பதும் முப்பத்தாறும் முப்பது மிடுகுரம்பை

அப்பர்போல் ஐவர்வந்து அதுதருகிது விடென்று ஒப்பவே நலியலுற்றால் உய்யுமாறறிய மாட்டேன் செப்பமே திகழுமேனி திருப்புகலு ரணிரே (4-54-8) "தொக்குநின்றைவர் தொண்ணுற்றறு வருந்துயக்கமெய்த

மிக்கு நின்றிவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து

போனேன்” (4-67-5)

“சானிரு மருங்குநீண்ட சழக்குடைப் பதிக்குநாதர்

வாணிகர் ஐவர் தொண்ணுற்றறுவரு மயக்கஞ்செய்து