பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யறிவின்கண்ணும் உடனாய் நின்று உணர்த்துபவன் ‘உள்ளங் கவர்கள்வனாகிய இறைவனே என்பதனை உள்ளத்தின் கண்ணனாகிய கள்வன்தான் (சிவ. சூ. 9 அதி. 2) எனவரும் தொடரினால் உணர்த்தினார் மெய்கண்டார்.

இங்ங்னம் இறைவன் உயிர்க்குயிராயிருக்கும் இறைவனது இருப்பினைத் தம் அனுபவத்தில் வைத்துனரும் பயிற்சியைப் பெறாது 'கடவுள் என்பதொருபொருள் இல்லை என்று கூறித் திரியும் பாழ்ங்கொள்கையினரை நோக்கித் திருநாவுக்கரசர் கடவுள் உண்டென்னுந்தங் கொள்கையினை உறுதியுடன் அறிவுறுத்துவதாக அமைந்தது,

"அந்திவட்டத்திங்கட் கண்ணியன் ஐயாறமர்ந்துவந்தென்

புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானையும்

பொய்யென்பனோ சிந்தி வட்டச்சடைக்கற்றையலம்பச் சிறிதலர்ந்த நந்திவட்டத்தொடு கொன்றைவளாவிய நம்பனையே’

(4-98-2)

எனவரும் திருவிருத்தமாகும்.

நிலையற்ற இவ்வுலகினையே மெய்யென நம்பி உலகமெலாம் இயக்கும் பேராற்றல் வாய்ந்த கடவுளையும் அம்முதல்வனது திருவருளானையால் ஊட்டப்பெறும் இருவினைப்பயனையும் இல்லையென்று சாதித்துத் திரியும் உலகாயதவாதிகளை நோக்கி,

"நீங்கள் இவ்வுலக நடையொன்றையே மெய்யென நம்பிக் கடவுளும் இருவினைப் பயனும் இல்லையென்று பேசுதலை விட்டொழியுங்கள். உம்மால் நிலையுடையதாகப் பேசப்படும் இவ்வுலகியல் வாழ்வில் ஐம்பெரும் பூதங்களின் மாறுதலால் புயல், கடற்பெருக்கு, பூகம்பம் முதலிய அழிவுகள் பெரும் படைகளைப் போன்று திடீரென்று தோன்றி அல்லல் விளைப்பதனைக் காண்கின்றீர்கள். இவ்வாறு உலகிலே அவ்வப்பொழுது உயிர்களின் வாழ்வுக்குத் தடையாகவுளவாகும் இடையூறுகளை