பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

71


மூன்றையுங் குறித்து நல்லிைைசப் புலவர்கள் பாடுதற்குரிய பாடாண் தினை பற்றிய பாடல்கள் எல்லாவுயிர்கட்குந் தோன்றாத் துணையாய் நின்று இன்னருள் சுரக்கும் முழுமுதற்கடவுளை வாழ்த்திய குறிப்புடன் கலந்து வருவனவாகும். முறை செய்து காப்பாற்றும் மன்னனைப் புகழ்ந்து பாடும் இப்பாடல்களில் அரசனது முறைமைக்கு உறுதுனையாகிய இறைவனை வாழ்த்திப் போற்றும் பகுதியும் இடம்பெறும் என்பதனை,

“கொடிநிலை கந்தழி வள்ளியென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'

எனவரும் சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். ஒரு நாட்டின் அரசியல் வாழ்வில் வேந்தர்கட்கு உளவாகும் வெற்றிகட்கெல்லாம் உயிர்க்குயிராய் விளங்கும் கடவுளின் திருவருளே உறுதுணையாய் நின்று உதவுந்திறத்தைப் புலத்துறைமுற்றிய சான்றோர் வேந்தர் முதலியோர்க்கு நன்கனம் அறிவுறுத்தி அவர்களுடைய உள்ளத்தைத் திருத்துதல் வேண்டும் என்பது தொல்காப்பியனார் கருத்தாகும் என்பதனை இச்சூத்திரத்தால் நன்குணரலாம்,

இனி, எல்லாம் வல்ல கடவுளைத் தன் ஆருயிர்த் தலைவனாகவும் உயிராகிய தன்னை அவனையடைய விரும்பிய தலைவியாகவும் எண்ணி இன்றியமையாத அன்புரிமையினால் கடவுளைக் காதற்கேண்மையிற் போற்றி வழிபடும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்தில் நிலை பெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இச்செய்தி,

'காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்'

எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் உய்த்துனரப்படும்.

17. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்தினையியல், 27.

18. மேலது, 23.