பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இத்துறைப் பொருளாகக் கடவுள் மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்பது புறப்பொருள் வெண்பா மாலையாலும் தொல்காப்பிய இளம்பூரணருரையாலும் நன்கு தெளியப்படும்.

உயிர்வாழ்க்கைக்கு நிலைக்களமாகக் காணப்படும் இவ்வுலகம் நிலம் நீர், தீ வளி, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையாலாகியது என்பதனை

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகமாதலின்"

எனவரும் தொடரிற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். பலவேறு அவயவப் பகுப்புடையதாய் ஐம்பொறி வாயிலாகச் சுட்டியறியப்படும் தன்மை இவ்வுலகின்பாற் காணப்படுதலின் இவ்வுலகம் என்றும் ஒரியல்பினதாய் விளங்கும் நிலை பேறுடையதன்று என்பர் அறிவர். இதன் இயல்பினை

"காஞ்சிதானே பெருந்திணைப்புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்

நில்லா வுலகம் புல்லிய நெறித்தே"

எனவரும் நூற்பாவில் நில்லாவுலகம்’ என்ற தொடரால் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளார். பருப்பொருளாகக் காணப்படும் இவ்வுலகம் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவற்றைத் தன்னகத்தே யடக்கியுள்ள அண்டங்கள் ஆகிய காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலமாய்க் காரணமாகிய நுண்பொருளை உலகம் எனவும் உலக இயக்கத்திற்கு உறுதுணையாகிய காலம் என்னும் தத்துவத்தைக் காலம்’ எனவும் காலம் உலகம்’ என்னும் முதற்குறிப்புடைய சொல்லதிகாரச் சூத்திரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை முன்னர் விளக்கப்பெற்றது. நிலமும் காலமும் சிய தத்துவங்கள் இரண்டும் மன்னுயிர்களின் வாழ்க்கைக்கு திலைக்கள மாதலால் இவற்றை 'முதற்பொருள் என்ற

கால்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 86.

தெ ல்காப்பியம், பொருளதிகாரம், புறத்தினையியல், 18.