பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“நாற்றானத்தொருவனை நானாயபரனை” (7-38-4)

எனவும்,

“என்னவனாம் அரன்” (7-3s-11)

எனவும் நம்பியாரூரரும் ஒதியவற்றால் நன்கு புலனாம். இத்திருமுறையாசிரியர்கள் அறிவுறுத்திய இவ்வுண்மை யினையே

{

'நானவனென்றோதினர்க்கு நாடுமுளம் உண்டாதல் தானென வொன்றின்றியேதானதுவாய்- நானெனவொன் றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடி வைத் தில்லென்று தானாம் இறை” (சிவ. சூ. 10 வெ. :)

எனவரும் வெண்பாவில் மெய்கண்ட தேவர் அறிவுறுத்தி யுள்ளார். திருமூலர் திருமந்திரத்தில் வேதாந்தம் என்றது உபநிடதங்களையே. மாயாவாதத்தை வேதாந்தம் என வழங்குதல் பிற்கால வழக்காகும்.

சிவபரம் பொருளின் திருவடியைச் சேர்தல் என்பது இறைவனது திருவருளிற் பதிதலாதலின் அதனைச் சிவமாதல் என வழங்குதலும் திருமூலநாயனார் காலந்தொட்டு வழங்கி வரும் சைவ சித்தாந்த மரபேயாகும். இவ்வுண்மை,

“ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக

நின்று சமயநிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே’ (1437)

எனவரும் திருமந்திரத்தாற் புலனாகும்.

ஆன்மா தன் பொருட்டன்மையழிந்து சிவம் ஒன்றாகியே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தான் தனித்து நில்லாமலும், பாலொடு அளாவிய நீர், தன் உண்மை கெடாமல் பாலின் தன்மையதாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்றாதல் போன்று, மலம் நீங்கித் தூயதாகித் தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாதலையே சிவமாதல் எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறும் என்பது