பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

813


மீண்டுவாரா வழியருளும நின் திருவருள் நெறியில் ஒழுகுதற்கு விருப்பு வெறுப்பற்ற ஒருமை மனம் வேண்டும். ஐம்புலவேடர்களின் ஆனைவழிநின்று தானல்லாதவற்றைத் தானெனக் கருதும் மயக்க நிலையினையுடையது என்மனம். இம்மனத்தைக் கொண்டு நின்னை நினைந்து போற்றுதல் எங்ங்னம இயலும்? கல்லைத்தெப்பமாகக் கொண்டு கடலைக் கடக்க எண்ணிய பேதையர் என்னையன்றி வேறுயாருளர்? பிறவிப்பெருங்கடலை அடியேன் கடக்கவும் வேண்டும், அங்ங்னங்கடத்தற்கு உறுதுணையாக நின்னை நினைத்தலும் வேண்டும்.” ஒரு நெறியில் நின்று நின்னை நினைந்து என இடை மருதீசனை நோக்கித் திருவெண் காட்டடிகள் வேண்டுவதாக அமைந்தது, திருவிடை மருதுர்மும்மணிக்கோவையின் நான்காம் பாடலாகும். இறைவனையுனர்ந்து போற்றுதற்கும் இறைவன் திருவருளே துணைபுரிதல் வேண்டும் என்னும் உண்மை இதனால் அறிவுறுத்தப்பெற்றமை காண்க.

எல்லாம் வல்ல முழு முதற்கடவுளாகச் சிவபெரு மானை நினையாமலும் அம்முதல்வன் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினை முறைப்படி ஓதாமலும், பச்சிலையும் நீருங்கொண்டு அம்முதல்வனை வணங்காமலும் வேறு யாராகவோ நினைக்கும் புறச் சமயத்தார் உள்ளத்திலும் இடை மருதீசன் பொன்னார் திருவடியே நண்ணி அருள் வழங்கும் என்பார்,

"ஒராதேயஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்

நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ எண்ணுவா ருள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுமா மென்னும்மது நாம்”

'அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்

ஒன்றொன்றோ டொவ்வா. துரைத்தாலும் - என்றும்

ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும்”

என்றார் திருவெண்காட்டடிகள். இப்பாடல்கள் எல்லாச் சமயத்தாராலும் வழிபடப்பெறும் பரம்பொருள் ஒன்றே