பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

821


திருத்தொண்டர்புராணத்தின் முதற்கண் உள்ள 'உலகெலாம் எல்லாவுலகங்களிலும் வாழும் அவன் அவள் அதுவெனும் மன்னுயிர்த்தொகுதியைச் சுட்டி நின்றது. எனவே கடவுள்வாழ்த்தாக அமைந்த இத்திருப்பாடலில் கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களுள் உயிர்களின் உண்மையும் அவை உடம்புடன் உலவு தற்கிடனாகிய உலகினது உண்மையும் உடன் கூறினாராயிற்று. இறைவன் அருளிய 'உலகெலாம்’ என்னும் இம்மறைமொழி 'அஞ்செழுத்து ஒதியேறினார் உய்ய உலகெலாம் (பெரிய. சம்பந்தர் 216) என இந்நூலின் நடுவிலும், மன்றுளார் அடியாரவர் வான்புகழ், நின்றதெங்கும் நிலவியுலகெலாம்” (பெரிய. வெள்ளானை) என இந்நூலின் முடிவிலும்

ஆசிரியரால் எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம்.

‘அருமறை முதலில் நடுவினிற் கடையில் அன்பர்.தஞ் சிந்தையில் அலர்ந்த, திருவளர்ஒளிசூழ் திருச்சிற்றம்பலம்’ முன்தோன்றிய திருத்தொண்டர் புராணமாகிய இத் திருமுறையில் திருவைந்தெழுத்தின் பெருமையினையும் இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் சிறப்பினையும் சேக்கிழாரடிகள் ஆங்காங்கே குறித்துள்ளமை மனங்கொளத் தகுவதாகும்.

சைவசமயத்தில் இறைவனை படைதற்குரிய வழிகளாகச் சரியை கிரியை யோகம் ஞானம் என நால்வகை நெறிகள் வகுக்கப் பெற்றுள்ளன. இந்நான்கினையும் ஏணிப் படிகளாகக் கொண்டு ஞான நெறியினைக் கடைப்பிடித் தொழுகும் சிவஞானிகளாகிய திருத்தொண்டர்கள் உலக மக்கள் உய்திபெறுதல் வேண்டி மேற்குறித்த நால்வகை நெறிகளுள் ஒன்றினைத் தமக்குச் சிறப்புடைய வாழ்க்கை நெறியாக மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளைச் சேக்கிழார் நாயனார் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

"ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலை”

(பெரிய திருமூலர் 26) “நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியாசாரியை யெலா

மலர்ந்த மொழித்திருமூலதேவர்” (பெரிய திருமூலர் 28)